சண்டேலீடர் செய்தித்தாளின் ஸ்தாபக ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க, கொலை தொடர்பில் 63 பேரின் வங்கிக்கணக்குகளை சோதனை செய்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றத்தின் நீதிவான் சுலோச்சனா வீரசிங்க இந்த அனுமதியை வழங்கியுள்ளார்.
இதில், லசந்த விக்கிரமதுங்க படுகொலை சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறி கைது செய்யப்பட்டுள்ள இராணுவப்புலனாய்வாளரின் வங்கிக்கணக்கும் அடங்குகிறது.
இதேவேளை லசந்தவின் கொலை தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள இராணுவப்புலனாய்வாளரின் விளக்கமறியல் எதிர்வரும் 25ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment