முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க யாழ்ப்பாணத்திற்கு செல்வதற்காக கொழும்பிலிருந்து புறப்பட்ட விமானத்தில் கோளாறு ஏற்பட்டதனைத் தொடர்ந்து விமானம்,
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளதாக நம்பகரமான தகவல்கள் தெரிவிக்கின்றன.
பின்னர் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க உள்ளிட்ட குழுவினர் வேறொரு விமானத்தின் மூலம் யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தை பாதுகாப்பாக சற்று முன்னர் சென்றடைந்துள்ளதாக அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க உள்ளிட்ட குழுவினர் யாழ்ப்பாணத்தில் இன்று பல்வேறுப்பட்ட தரப்பினரை சந்தித்து கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment