August 10, 2016

தயா மாஸ்டருக்கு அழைப்பாணை!

விடுதலைப் புலிகள் அமைப்பின் ஊடகப் பேச்சாளராக செயற்பட்டிருந்த, தயா மாஸ்டரை வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.


கடந்த காலங்களில் விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து செயற்பட்டதாக கூறப்படும் நபர்கள் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில், அதன் நடவடிக்கையாகவே இவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, நாளை (புதன்கிழமை) வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு, தயா மாஸ்டருக்கு நீதிமன்ற அழைப்பானை விடுக்கப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து செயற்பட்டிருந்த, தயா மாஸ்டர் தற்போது யாழப்பாணத்தில் இயங்கிவரும் தனியார் ஊடகமொன்றில் பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment