August 21, 2016

வழக்கு விசாரணைக்காக வெளிநாட்டவருக்கு தீவிர பாதுகாப்பு!

முன்னாள் அமைச்சர் மேவின் சில்வாவின் மகன், மாலக சில்வா, வெளிநாட்டு தம்பதியினரை தாக்கிய சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணை, எதிர்வரும் 25ஆம் திகதி கொழும்பு நீதிவான் நீதிமன்றில் இடம்பெறவுள்ளது.


இதன்போது மாலக சில்வாவினால் தாக்கப்பட்ட வெளிநாட்டவரான ஜேம்ஸ் கேசர்லீ சாட்சியமளிக்கவுள்ளார்

இதனையடுத்து அவருக்கு கடும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று கொள்ளுப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இரண்டு வருடங்களுக்கு முன்னர் 2014. ஓக்டோபர் 31ஆம் திகதியன்று இரவுநேர கேளிக்கை விடுதி ஒன்றில் வைத்து பிரித்தானியரான கேசர்லியின் நண்பியான பெலின்டா மெக்கன்ஸியை தொந்தரவு செய்தார் என்ற அடிப்படையில் மாலிக சில்வா மீது கேசர்லி தாக்குதல் நடத்தினார்.

இதனையடுத்து மாலக சில்வாவின் மெய்பாதுகாவலர்கள், கேசர்லியை தாக்கினர்.

இந்தநிலையில் இரண்டு தரப்பினரும் கொள்ளுப்பிட்டி பொலிஸில் தமது முறைப்பாட்டை பதிவு செய்தனர்.

இதேவேளை சம்பவம் இடம்பெற்றவேளையில் இலங்கையின் தொழில் செய்துக்கொண்டிருந்த சேகர்லிக்கு அவருடைய தொழில்தருனர், மாலிக சில்வா மீது செய்த முறைப்பாட்டை விலக்கிக்கொள்ளுமாறு அச்சுறுத்தியதாகவும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment