வெளிநாடுகளுக்கு தொழிலுக்காக செல்லும் பெண்கள் உடல், உள, உபாதைகளுக்கு உள்ளாகி நிர்க்கதியான நிலையில் நாடு திரும்புகின்றனர். இந்நிலை மாற்றப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி. ஸ்ரீஸ்கந்தராஜா இன்று சபையில் தெரிவித்தார்.
அத்தோடு பெண்கள் வெளிநாடு செல்வதால் அவர்கள் சார்ந்த குடும்பங்களுக்கு பிரச்சினைகள் தலைதூக்குகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில இன்று வெள்ளிக்கிழமை ஜே.வி.பி.யினால் முன்வைக்கப்பட்ட பெண்கள் வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்வதால் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பான சபை ஒத்திவைப்பு பிரேரணை விவாதத்தில் உரையாற்றும் போதே ஸ்ரீஸ்கந்தராஜா எம்.பி. இவ்வாறு தெரிவித்தார்.
சபையில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், பெண்கள் வெளிநாடுகளுக்கு வேலை வாய்ப்பு பெற்று செல்வதால் கணவன் வாழ்க்கையில் பிழையான வழிக்கு சென்றுவிடுகிறார்கள். அதாவது தவறான உறவுகளையும் ஏற்படுத்திக் கொள்கிறான்.
தந்தையின் அரவணைப்பு வழிநடத்தலின்றி பிள்ளைகளின் வாழ்க்கை சீரழிந்து போகிறது.
அது மட்டுமல்லாது வெளிநாடு செல்லும் பெண்கள் உடல், உடை உபாதைகளுக்கு உள்ளாகி நிர்க்கதியான நிலைக்கு தள்ளப்படுகின்றார்கள்.
அவ்வாறானதோர் நிலையில் நாடு திரும்புகின்றனர். இந்நிலைமை மாற்றப்பட வேண்டும்.
எனவே நாட்டில் சுயதொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்த வேண்டும்.
வெளிநாடுகளுக்கு வேலைக்காக செல்லும் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை முன்வைத்து அரசு அதற்கு தீர்வு காணவேண்டும்.

No comments:
Post a Comment