August 12, 2016

காலாவதியான இறக்குமதி செய்யப்பட்ட அரிசி அழிப்பு!

கிளிநொச்சிப்பகுதியில் காலாவதியான இறக்குமதி செய்யப்பட்ட அரிசியினை பொதிமாற்றிய இரண்டு வர்த்தகர்களுக்கு பதினாறாயிரம் ரூபா தண்டப்பணம்
விதிக்கப்பட்டதுடன் அரிசியினையும் அழிக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் இருந்து இறக்குமதிசெய்யப்பட்டகாலாவதியானஅரிசியினைமாற்றி
பொதி செய்த அரிசியாலை உரிமயாளர் மற்றும் வர்த்தகர்ஒருவரிடமிருந்தும் காலாவதியான25 கிலோ எடை கொண்ட 152 பைகளை பாவனையாளர் அதிகாரசபையினர் மீட்டுஅவர்களுக்குஎதிராகவழக்குப்பதிவு செய்து நேற்று பிற்பகல்கிளிநொச்சிமாவட்டநீதிவான் நீதிமன்றில் நீதிமண்றநீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் ஆஜர்ப்படுத்தியதையடுத்துகுறித்தகுற்றச்சாட்டுக்கள் தொடர்பில் முதலாவது குற்றவாளிக்கு பத்தாயிரம் ரூபாவும் இரண்டாவது குற்றவாளிக்கு ஆறாயிரம் ரூபாவும் எனபதினாறாயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டதுடன் அரிசியினையும் அழிக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment