July 1, 2016

வீதியோர வாழ்கையின் மரணங்கள்-உளவளத்துணையாளர் N.BA.நிக்சன்!

வடகிழக்கில் வாழ்ந்துவரும் மக்களின் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒன்றாக போர் வாழ்வு இருந்திருக்கிறது.
அனைவரையும்  இறப்பு ,உயிர் அச்சத்தின் பயம் , உச்சம்வரை கொண்டு சென்றுள்ளது இதனை எதிர்கொள்ள வேண்டிய ஒரு கட்டாயத்திற்குள் போர் வாழ்க்கை இருந்துள்ளது  என்பதனை எவரும் மறுக்கவோ மறந்திடவோ முடியாது.


பாரிய உள்நாட்டு யுத்ததின் இடப்பெயர்வு,முழுமையாக மக்களுடைய நிலமையினை மாற்றிவிட்டது. உளசமூக நன்னிலை கட்டமைப்பில்   மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி உளவியல்  ரீதியாக மக்களை அதிகமாக பாதிப்படைய வைத்திருக்கிறது,

ஒரு தனிநபர் சாதாரணமாக உளவியல் ரீதியாக பாதிக்கப்படுகின்றமை நாம் அறிந்த உண்மை. அந்தவகையில் 2008,2009 வடக்கில் ஏற்பட்ட பாரிய யுத்த அனர்த்தத்தின் பின்னர் அன்றாடத் தேவைகளை பூர்த்தி செய்வதில் கூட பல உளவியல் ரீதியான பின்னடைவுகளை ஏற்படுத்தி உள்ளதை அவதானிக்க முடிகின்றது.

2009 யுத்தம்  மற்றும் வன்முறை மோதல்களின்போது தொடர்ச்சியான ஷெல் தாக்குதல்கள்,குண்டு வீச்சுக்கள்,உலங்கு வானூர்தி தாக்குதல்கள்,துப்பாக்கி சூடுகள், கையெறிகுண்டு வீச்சுக்கள் , மற்றும் கண்ணிவெடிகள்,மரணங்கள், காயங்கள்,அழிவுகள்,இழப்புக்கள் ,பதுங்குகுழி வாழ்வு,சுற்றிவளைப்புகள்,சரணடைல்,
தேடுதல் பெருந்தொகை ,கைதுமுயற்சிகள்,தடுப்புக்காவல்கள்,
தாக்கங்கள் என்பனவற்றின் தனிமனிதனது அறிவு அனுபவம் செயற்பாடுகளில் தாக்கத்தின் அளவு கூடுதலாக காணப்படுகின்றது

சமூக ,அரசியல்,பொருளாதார,மற்றும் உளவியற்காரணிகள் மிகவும்  நேரடி தாக்கத்துக்கு மேலதிகமாக, யுத்தத்தின் விளைவாக குடும்ப மற்றும் சமூக மட்டத்தில் கூட்டான வேதனைகளும் அதிர்ச்சிகளும் ஏற்படுத்தியிருக்கின்றது .

குடும்ப மற்றும் சமூக நடவடிக்கைகள் ஆதரவுக் கட்டமைப்புகள் மற்றும் வலையமைப்புகள், நன்னெறி மற்றும் தார்மீக மதிப்புகள், என்பனவற்றில் ஒரு முறிவு ஏற்பட்டிருக்கின்றது .

பாரிய யுத்த அனர்த்தத்தின் பின்னரான  வாழ்வில் பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டிருக்கின்றனர் இவற்றில் முதியவர்கள் பலர் இன்று வீதியோரங்களிலும்,மரநிழல்களிலு்,ஆலயங்களிலும்,போக்குவரத்து தரிப்பிடங்களிலும் வாழ்கின்றார்கள்.

இவர்களில்  அதிகமானோர் ஆதரவற்று தனிமையில் உள்ளனர் ,பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டவர்கள்,
பிள்ளைகளுக்கும், உறவினர்களுக்கும் தங்களால் தொந்தரவு வேண்டாம் என்று நினைப்பவர்கள் , பிள்ளைகளை யுத்தத்தில் பறிகொடுத்தவர்கள், காணமல் ஆக்கப்பட்டவர்களின் பெற்றோர்கள்,நீண்டகாலம் சிறையில் உள்ளவர்களின் பெற்றோர்கள் ,கணவன் அல்லது மனைவி அல்லது பிள்ளைகள் இல்லாதவரகள் ,இருக்கும் பிள்ளைகளின் அல்லது உறவினர்களின் குடும்ப வாழ்வதரத்திற்கு தமது பங்களிப்பினை செய்வதற்காகவும் வீதியோர வாழ்க்கையினை வாழ்கின்றார்கள்.

இவர்களில்   கால்கள்,கைகள்,கண்கள் என உடல் உறுப்புக்கள் இழந்தவர்களும்
காணப்படுகின்றனர். இவ்வாறான அவசியமான அங்கங்களை இழந்தவர்களும்  உடலில் பல துப்பாக்கி ரவ்வைகளை சுமந்தும் காணப்படுவதனால் உடல் உபாதைகளுக்கும் மனவடு  நிலைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.
இதனால் தாம்  தமது செயற்பாடுகளை சுயமாக மேற்கொள்ள முடியவில்லை என்ற ஏக்கம் அவர்களிடையே காணப்படுகின்றது.

சிலருக்கு தாம் இழந்த அங்கங்கள் தமக்கு இருப்பது போன்ற உணவர்வுகளைக் கொண்டிருக்கின்றனர். இவர்களுக்கு இப்பாதிப்பினை ஏற்படுத்திய  யுத்தக்காட்சிகளை இன்னும் ஞாபகத்தில் கொண்டு அதனை கூறக்கூடியவர்களாக இருக்கின்றனர். இதனால் அழுகை,பயம் போன்ற உணர்வுகளுடன் உள்ளனர்.

இத்தகையவர்கள் எதிர்காலம் பற்றிய நம்பிக்கை இன்றிக் காணப்படுகின்றார்கள் . இவர்களுக்கு தொழில்  செய்ய முடியாமை குடும்ப பொறுப்புக்கள் அதிகரித்தல், சுயமாக எவ்விதமான வேலைகளிலும் ஈடுபட முடியாமையினால்  வீதிகலும், கடைகளிலும் ,நகர்பகுதிகளிலுள்ள வீடுகளிலும் உணவுக்கும் தமது அன்றாட தேவைகளுக்கும் யாசகம் கேட்டு கையேந்தி வாழ்கின்றார்கள்.

இவர்களில் பலர் தனிமை,கவலை, அச்சம், வெறுப்பு, கோபம், சோர்வு, பதட்டம், எரிச்சல், பழிவாங்கும் உணர்வு, விரக்தி, தற்கொலை எண்ணம், ஏக்கம், ஏமாற்றம், இயலாமை, நம்பிக்கையின்மை, மனக்குழப்பம், மனச்சோர்வு என தங்களை மறந்து மனவருத்தத்துடன் கூடியவர்களாக காணப்படுகின்றனர். சிலர் தன்னம்பிக்கை இழந்தவர்களாகவும் காணப்படுகின்றனர்.

இவர்களின் சுகாதரம்,உணவு ,மருத்துவம் என அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதற்கு  நாளாந்தம் ,உடல் ,உள ,பாலியல்ரீதியன சுறண்டல்கள் என பல சொல்ல முடியாத துயரங்களையும் சித்திரவதைகளையும் அனுபவித்து  வீதியோரத்தில் வாழ்கின்றார்கள்.

இவர்கள் ஆரம்பத்தில் தமது சொந்த இடங்களில் குடும்பம், பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் என கூட்டுக்குடும்பமாகவும் நண்பர்கள்,உறவினர்கள் ,என நிறைவாக யாவரும் ஒன்றாக வாழ்ந்தவர்கள் .

தற்போது யுத்தத்தினால் அவர்களின் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் போன்றோர் இறந்துள்ளமையும்  , காணாமல் ஆக்கப்பட்டும் , சிறைகளில் உள்ளமையாலும் இவர்களை பராமரிப்பதற்கு யாரும் இல்லை என்ற ஏக்க உணர்வுடன் வாழ்கின்றார்கள்.

பழைய வாழ்க்கை நிலையினை எண்ணி வருத்தமடைதல், நடை, உடை பாவனைகளில் மாற்றம் காணப்படுதல், இலகுவில் அழுதல்,தம்மையறியாமலேயே சிறுநீர் கழித்தல் , மது ,போதைப்பொருள்களுக்கு அடிமையாதல் ,சமூக விரோத சொயல்களில் ஈடுபடுதல் , இது போன்றவை செயற்பாடுகளின் விளைவாக  குடும்பம் மற்றும் சமூக அந்தஸ்து என்பனவற்றை இழந்து ஒதுங்கியும் ஒதுக்கப்பட்டும் வாழ்கின்றார்கள்.

இவர்களில் பெரும்பாலானோர் போரின் மூலம் ஏற்பட்ட காயவடுக்கள் காரணமாக மாற்றுத்திறனாளிகளாகவும் மற்றும் உளநலம் பாதிக்கப்பட்டவர்களும் உள்ளார்கள் . இவர்களை சுமையென்று கருதி உறவினர்களால் கைவிடப்பட்டும் உள்ளார்கள்.

 நீண்ட காலமாக பலரது  காணிகள் இராணுவ உயர்பாதுகாப்பு வலயங்களாகவும் இராணுவ முகாம்களும், உள்ளமையால் மீழ்குடியேற முடியாத நிலையிலும் பலர் வீதிகளில் வாழ்கின்றார்கள்.

தமிழ் அரசியல் தலைமைகள் தேர்தல் காலங்களில் மட்டும்  வீதிகளில் வாழ்பவர்களில் சிலரை தனிமைப்படுத்தி வயோதிபர் இல்லங்களில் கொண்டுபோய் விட்டிருந்தார்கள் .
எஞ்சி இருப்பவர்கள் ஒருபுறம் இருக்க தொடர்ந்தும் நாளுக்கு நாள் வீதிகள்எங்கும் அதிகரித்து வரும் வாழ்க்கையும் வீதிகளில் அனாதரவற்று இறந்த உடல்களை காணமுடிகிறது
இப்படி வீதிகளில் தமது வாழ்நாளைக் கழிக்கும் முதியவர்களின் எண்ணிக்கை  அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது

உறவு நிலையிலும், குடும்ப கட்டமைப்பிலும்,பொருளாதாரத்திலும், உளவியல் ரீதியாகவும் பாதிப்புக்களுடன் வாழ்ந்துவரும் உறவுகளுக்கு மருத்துவபுனர்வாழ்வு  ,வாழ்வாதாரம் மீள்குடியேற்றம்,கட்டுமாணம் என இவர்களின் அபிவிருத்தி நோக்கிய உள சமூக புனர்வாழ்வு நடவடிக்கைகளை மத்திய அரசும் மாகாணசபையும் கவனத்தில் கொண்டு செயலாற்ற வேண்டும்

நன்றி

No comments:

Post a Comment