July 18, 2016

ஆட்சி மாறினாலும் அரசின் கொள்கைகள் மாறவில்லை! - சுரேஸ் பிரேமச்சந்திரன் !

இலங்கையில் அரசாங்கம் மாறினாலும் பழைய அரசின் கொள்கைகளே பின்பற்றப்படுகின்றன என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். தற்போதைய அரசாங்கம் மனித உரிமை விவகாரங்களில் சிறந்தவர்கள் என்பதனை உலகிற்கு காண்பித்துக்கொள்ள முயற்சிக்கிறது.


 
எவ்வாறெனினும் புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் மற்றும் சிவிலியன்கள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுகின்றனர். இராணுவத்தினர் தொடர்ந்தும் பெரும்பகுதி தனியார் காணிகளில் நிலைகொண்டுள்ளனர். புதிய அரசாங்கத்தின் கீழும் படையினர் தொடர்ந்தும் தங்களது நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்து வருகின்றனர். படையினர் தொடர்ந்தும் காணி அபகரிப்பில் ஈடுபட்டு வருவதுடன், தமிழ் கிராமங்களில் தொடர்ந்தும் பௌத்த விஹாரைகள் அமைக்கப்படுகின்றனர்.

தமிழர் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கும் விவகாரத்தில் கடந்த அரசாங்கத்திற்கும் தற்போதைய அரசாங்கத்திற்கும் இடையில் எவ்வித வித்தியாசத்தையும் காண முடியவில்லை. கடந்த மஹிந்த ராஜபக்ஸ ஆட்சிக் காலத்தில் என்ன விடயங்கள் இடம்பெற்றனவோ அதே விடயங்கள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment