July 19, 2016

பொன்சேகா இராணுவப் புரட்சிக்கு தயாராகலாம்??? விமல் வீரவன்ச!

நாட்டில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்ட சபாநாயகர் ஆகிய மூவரும் இன்று நாட்டில் இல்லை. இந்நிலையில் பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகாவிற்கு வேறு யோசணை தோன்றி விட்டால் என்ன செய்வது என பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச கேள்வி எழுப்பியுள்ளார்.


எமது ஆட்சிக் காலத்தில் ஜனாதிபதி இல்லை என்றால் பிரதமர் நாட்டில் இருப்பார். ஆனால் தற்போது யார் நாட்டில் இருக்கின்றனர் என்பது யாருக்கும் தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

ராஜகிரியிவில் அமைந்துள்ள என்.எம்.பெரேரா நிலையத்தில் இன்று நடைப்பெற்ற ஊடக சந்திப்பிலேயே பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச இவ்வாறு தெரிவித்தார். இவர் இங்கு தொடர்ந்தும்கூறுகையில்,

எந்தவொரு நாட்டிலும் இவ்வாறு நடைப்பெறாது. ஜனாதிபதி இல்லை என்றால் பிரதமர் நாட்டில் பொறுப்புக்களை ஏற்று செயற்படுவார். ஆனால் இலங்கையில் தற்போதுள்ள நல்லாட்சியில் யார் நாட்டில் இருக்கின்றனர் என்பது யாருக்கும் தெரியாது.

ஜனாதிபதி நாட்டில் இல்லை . பிரதமரும் நாட்டில் இல்லை. போதாதற்கு சபாநாயகரும் நாட்டில் இல்லை. இவ்வாறானதொரு நிலையில் பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகாவிற்கு வேறு யோசணை தோன்றி ஆட்சியில் கைவைத்து விட்டால் என்ன செய்வது.

எனவே பொறுப்பற்ற செயல். வீதியில் செல்கின்றவர்களை அழைத்து அந்த பதவிகளை கொடுக்கவா? அந்த நிலைமைக்கே நாடு வந்துள்ளது என குறிப்பிட்டார்.

பொன்சேகா இராணுவப் புரட்சிக்கு தயாராகலாம் எனும் அச்சம் வீரவன்சவிடம் இருப்பதாக நோக்கர்கள் கூறுகிறார்கள்….

No comments:

Post a Comment