July 12, 2016

இந்திய முன்னாள் பிரதமர் ராஜூவ்காந்தி கொலை வழக்கு : இலங்கை சிறைக்கு மாற்றக் கோரி மனு தாக்கல்!

இந்திய முன்னாள் பிரதமர் ராஜூவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டணை பெற்றுள்ள சாந்தன் தன்னை இலங்கை சிறைக்கு மாற்றுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.


தனது கோரிக்கை அடங்கிய மனுவை அவர், சிறைச்சாலை கண்காணிப்பாளரிடம் கையளித்துள்ளார். சாந்தன் தற்போது வேலூர் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், இந்தியாவில் தனக்கு உறவினர்கள் யாரும் இல்லாத காரணத்தினால் தன்னை இலங்கை சிறைக்கு மாற்றுமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

குறித்த மனுவானது, மத்திய மற்றும் மாநில உள்துறை செயலாளர்களுக்கு வேலூர் சிறைச்சாலை கண்காணிப்பாளர் ஊடாக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த கோரிக்கை அடங்கிய மனுவானது இலங்கை அரசாங்கத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment