July 19, 2016

ஆஸ்திரேலிய அகதி முகாம்கள் எவ்வளவு கொடூரமானது?

அகதிகளுக்கான தடுப்பு முகாம்கள் எவ்வளவு கொடூரமானது என்பதையும் ஆஸ்திரேலிய அரசின் கடுமையான அகதிகள் கொள்கை பற்றியும் பேசுகிற”சேசிங் அசேலம்(Chasing Asylum)” என்ற ஆவணப்படுத்தினை வெளியிட்டுள்ளார் ஈவா ஓர்னர். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இவர் ஆப்கானிஸ்தான் தொடர்பான தன்னுடைய படத்திற்கு ஆஸ்கர் விருதை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.


ஆஸ்திரேலியாவை நோக்கி கடல் வழியாக புகலிட கோருபவர்களின் இறப்பு தொடர்பாக எந்த கணக்கையும் ஆஸ்திரேலிய அரசு வைத்துக் கொள்வதில்லை என குற்றம்சாட்டுகிறார் ஈவா ஓர்னர். இது தொடர்பாக பேசியுள்ள இவர், குழந்தைகளை தடுப்பு முகாம்களில் காலவரையின்றி வைத்திருக்கும் நாடாக ஆஸ்திரேலியா உள்ளதாகவும் குழந்தைகளுக்கு எதிரான பெருமளவு வன்முறைகள் இங்கு நிகழ்வதாக தெரிவித்துள்ளார்.

பப்பு நியூ கினியா, நவுரு உள்ளிட்ட தீவுப்பகுதிகளில்வைத்துள்ள ஆஸ்திரேலிய முகாம்களுக்கு எந்த பத்திரிகையாளரும் அனுமதிக்கப்படுவதில்லை. அதோடு அந்த பகுதிக்கு செல்வதற்கான விசா தொகையை உலகிலேயே எங்கு இல்லாத அளவிற்கு 8000 டாலராக வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அம்முகாம்களின் சூழலை வெளிச்சத்திற்கு கொண்டுவந்துள்ளது சேசிங் அசேலம் என்ற ஆவணப்படம்.


No comments:

Post a Comment