எதிர்வரும் 28 ஆம் திகதி பாதை யாத்திரை செல்லவிருந்த முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இதற்காக அவர் பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும் என கிராமிய கைத்தொழில் அமைச்சர் பீ. ஹெரிசன் தெரிவித்துள்ளார்.
தேசிய கால்நடை வள சபையில் இன்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
மேலும் அங்கு கருத்து தெரிவித்த அமைச்சர்
பஷில் ராஜபக்சவை சிறைக்கு கொண்டு சென்றதும் அவருக்கு சுகவீனம் ஏற்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உண்மையில் பசில், நிதி மோசடி விசாரணைப் பிரிவுக்கு மலர் வைத்து வணங்க வேண்டும்.
இப்படி நோய் உள்ள ஒருவர் பாதை யாத்திரை சென்றிருந்தால், எப்படியான விபரீதம் ஏற்பட்டிருக்கும்.
சிறையில் உள்ள மருத்துவர்களுக்கு ஏதோ நோய் இருக்கின்றது அல்லது பசில் ராஜபக்சவுக்கு நோய் இருக்க வேண்டும்.
மருத்துவர்களால் பசில் ராஜபக்சவுக்கு ஏற்பட்டுள்ள நோயை கண்டுபிடிக்க முடியாது போயுள்ளது.
எனக்கு தெரிந்த வகையில் பசில் ராஜபக்சவுக்கு ஏற்பட்டுள்ள நோய்க்கு ஒரே மருந்து தான் உள்ளது. அந்த மருந்தை கொடுத்தால் குணமாகும்.
குழாய் பொக்கிஷத்தை அவருக்கு மருந்தாக கொடுக்க வேண்டும். குழாய் விநியோகம் சம்பந்தமாகவே அவர் சிறைக்கு சென்றுள்ளார்.
குழாய் பொக்கிஷத்தை பருக கொடுத்தால், பசிலுக்கு ஏற்பட்டுள்ள நோய் முற்றாக குணமாகும் எனவும் அமைச்சர் பீ. ஹெரிசன் குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Post a Comment