2016-ம் ஆண்டு உலக அழகன் பட்டத்துக்கான போட்டி பிரிட்டனில் நடந்தது. இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த மாடலிங் துறையை சேர்ந்தவர்கள், நடிகர்கள் கலந்து கொண்டனர்.
இதில் ஐதராபாத்தை சேர்ந்த ரோகித் கன்டேவாலும் பங்கேற்றார். பல சுற்றுக்கள் முடிவில் 46 பேர் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றனர். இதில் ரோகித் கன்டேவாலும் அடங்குவார்.
இறுதிப்போட்டியில் ஒவ்வொருவரும் தங்களது திறமைகளை காட்டினர். இதன் முடிவில் இந்தியாவின் ரோகித் கன்டேலால் உலக அழகன் பட்டத்தை கைப்பற்றினார்.உலக அழகன் பட்டத்தை வெல்லும் முதல் இந்தியர் ரோகித் ஆவார். மேலும் முதல் ஆசியாவை சேர்ந்தவர் என்ற சிறப்பையும் பெற்றார். ரோகித்தின் உடல்வாகு, முடி அலங்காரம் ஆகியவை அவருக்கு வெற்றி வாய்ப்புகளை அதிகப்படுத்தியது.
பட்டத்தை வென்றது குறித்து ரோகித் கூறுகையில், “இதை என்னால் இன்னும் நம்ப முடியவில்லை. மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. எனது ரசிகர்கள் மற்றும் எனக்கு ஆதரவு அளித்தவர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
அவர்கள் ஊக்கத்தால் தான் உலக அழகன் பட்டத்தை வெல்ல முடிந்தது. பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என்பது பெருமை அளிக்கிறது” என்றார்.
26 வயதான ரோகித் கன்டேவால் மாடலிங் துறையில் இருந்தார். இந்தி டி.வி. தொடர்களிலும் நடித்து வந்தார். அவர் 2015-ம் ஆண்டு மிஸ்டர் இந்தியா பட்டத்தை வென்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment