முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலை தொடர்பாக 7 சந்தேகநபர்களுக்கு எதிராக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளது.
இந்த வழக்கு தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் பிரதீப் சந்திம தாக்கல் செய்த மீளாய்வு மனு நேற்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான சிரேஷ்ட சட்டத்தரணி இதனை குறிப்பிட்டுள்ளார்.
வழக்கு தொடர்பான பூர்வாங்க விசாரணைகள் முடிந்துள்ளன. அடுத்த சில நாட்களில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீ்ழ் வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பழனிச்சாமி சுரேஸ், ஹெட்டியாராச்சிகே பிரதீப் சந்தன குமார, காமினி செனவிரத்ன, பிரதீப் சந்திம, சரன் எனப்படும் சிவகாந்தன் விவேகானந்தன், பபியன் ரோய்ஸ்டன் துசேன், சம்பத் முனசிங்க ஆகிய 7 பேருக்கு எதிராகவே பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீ்ழ் வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment