விடுதலைப்புலிகளுடன் இணைந்து செயற்பட்ட குற்றச்சாட்டின்கீழ் 13 பேர் மீது சுவிஸ் சட்டமா அதிபர் அலுவலகம், நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்துள்ளது.
விடுதலைப்புலிகளுக்கு பல மில்லியன் டொலர் நிதியைத் திரட்டிக் கொடுத்தார்கள் என்ற குற்றச்சாட்டு இவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது. இவர்கள் 13பேரும் சுவிட்ஸர்லாந்து, ஜேர்மனி மற்றும் இலங்கையை சேர்ந்தவர்களாவர்.
குற்றவியல் மற்றும் பணச்சலவை சட்டங்களின் கீழ் இந்த குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. விடுதலைப்புலிகள் உலக தமிழ் ஒருங்கிணைப்புப் குழுவின் ஊடாகவே இந்த நிதியை பெற்றுவந்தாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதற்காக சிக்கலான நுண்கடன் திட்டம் ஒன்றும் செயற்படுத்தப்பட்டுள்ளது. தமிழ் புலம்பெயர்வாளர்களிடம் இருந்து விடுதலைப்புலிகள் கடல்கடந்த பணம் அனுப்பும் முறை மற்றும் கடன்கள் என்ற அடிப்படையில் நிதி சேகரித்து வந்துள்ளனர்.
இதற்காக உலக தமிழ் ஒருங்கிணைப்புப் குழு முழுமையாக ஆதரவை வழங்கிவந்துள்ளது என்று குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் 2009ஆம் ஆண்டில் விடுதலைப்புலிகள் போரில் தோல்விக்கண்ட பின்னர் இந்த நிதிமாற்றல் நடவடிக்கைககள் யாவும் நிறுத்திக்கொள்ளப்பட்டதாக சுவிஸ் சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

No comments:
Post a Comment