July 17, 2016

பலாலியை பிராந்திய விமானத்தளமாக விஸ்தரிக்க இந்தியா கள ஆய்வு!

பலாலி விமானத்தளத்தை பிராந்திய விமானத்தளமாக பயன்படுத்துவது குறித்த கள ஆய்வை இந்தியா மேற்கொள்வதாக ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.


தற்போது இந்த விமானத்தளம் பொதுமக்கள் மற்றும் இராணுவத் தேவையாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் பலாலி விமானத்தளத்தை அபிவிருத்தி செய்வதற்கான வாய்ப்புகள் குறித்து தற்போது கள ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவதாக இலங்கை சிவில் விமானசேவை அதிகாரசபையின் பணிப்பாளர் எம்.எம்.சி.நிமல்ஸ்ரீ தெரிவித்துள்ளார்.

இதன்படி பலாலி விமானத்தளத்தை பிராந்திய விமானத்தளமாக பயன்படுத்துவது குறித்து ஆராயப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே இந்த விமான நிலையத்தின் ஓடுபாதை 1000 மீற்றரில் இருந்து 2300 மீற்றராக விஸ்தரிக்கப்பட இந்தியா உதவியளித்துள்ளது.

2010ஆம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையின்படி இது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை இந்தியாவினால் பலாலி விமானத்தளம் பிராந்திய விமானத்தளமாக விஸ்தரிக்கப்பட்டாலும் அதனை இலங்கையின் சிவில் விமான சேவைகள் அதிகார சபையே பொறுப்பேற்று நடத்தும் என்று நிமல்ஸ்ரீ குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment