June 12, 2016

ஐ.நா. மனித உரிமைகள் மாநாடு நாளை, இலங்கைப் பிரச்சினை சிக்கலில்!

இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் யுத்த மீறல்கள் தொடர்பான விசாரணைக்கு ஹய்ப்ரிட் நீதிமன்றமா? உள்ளக விசாரணையா?
என்ற நெருக்கடி நிலைமையை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் தோற்றுவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சர்வதேச நீதிபதிகள் கொண்ட ஹய்ப்ரிட் நீதிமன்றத்தை வேண்டி பேர் கொண்ட சர்வதேச சட்டத்தரணிகள் குழுவொன்று மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் செய்த் ராத் ஹுஸைனைச் சந்தித்து வேண்டுகோள் விடுத்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இதேவேளை, இலங்கை அரசாங்கம் உள்நாட்டு நீதிபதிகளைக் கொண்ட விசாரணைப் பொறிமுறையொன்றை அமைக்குமாறு ஆணையாளர் செய்த் ராத் ஹுஸைனிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இந்த இரு வேண்டுகோளுக்கும் சவாலாக வடக்கு முதலமைச்சர் சி.வி. விக்னேஷ்வரன் சர்வதெச நீதிமன்றத்தை சர்வதேச நீதிபதியான அமெரிக்காவின் பிரன்சிஸ் பொய்லிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மனித உரிமைகள் ஆணைக்குழுக் கூட்டம் நாளை 13 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர எதிர்வரும் 28 ஆம் திகதி உரையாற்றவுள்ளார்.

No comments:

Post a Comment