சாலாவ ஆயுத களஞ்சியசாலையில் ஏற்பட்ட வெடி விபத்தினைத் தொடர்ந்து பொதுமக்களின் இருப்பிடங்களுக்கு அண்மையில் அமைந்துள்ள இராணுவ ஆயுதக் களஞ்சியங்கள் இடமாற்றப்படவுள்ளன.
மக்கள் குடியிருப்பு பிரதேசங்களிலிருந்து ஆயுத களஞ்சியசாலைகளை அகற்றும் தேசிய பாதுகாப்புச் சபையின் தீர்மானத்துக்கு அமைய, வியாங்கொடயில் அமைந்துள்ள இராணுவ ஆயுத களஞ்சியசாலையை அகற்றும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, சிரேஷ்ட இராணுவ அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
வியாங்கொட நகருக்கு அருகில் அதிக மக்கள் நடமாட்டமுள்ள பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள குறித்த இராணுவ ஆயுத களஞ்சியசாலையை அகற்றி, வேறு இடத்துக்கு மாற்றுவதற்கு வியாழக்கிழமை முதல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
வியாங்கொட நகரில் ரயில் நிலையம், பாடசாலை, பொருளாதார மத்திய நிலையம், பிரதான ரயில் பாதை, மத வணக்கஸ்தலங்கள் என்பன அமையப் பெற்றுள்ள மக்கள் நடமாட்டம் அதிகம் காணப்படும் ஒரு பகுதியில் காணப்படும், பழைய வேடெக்ஸ் புடவைத் தொழிற்சாலைக் காணியில் இந்த ஆயுத களஞ்சியசாலை அமையப்பெற்றுள்ளது.
எனினும், பாதுகாப்பு காரணங்களுக்காக புதிய களஞ்சியசாலை அமையப்பெறும் இடம் குறித்து தகவல் வெளியிட முடியாது என்றும் குறித்த இராணுவ அதிகாரி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Post a Comment