June 13, 2016

ஐநாவிலும் மைத்திரி என்னை திட்டுகிறார் ; மஹிந்த குமுறல்!

ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கு சென்று உரையாற்றும் போதும் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தம்மைத் திட்டுவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.


ஜப்பான் வாழ் இலங்கையர்களுடன் நடத்திய சந்திப்பின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

எந்தவொரு குற்றச்சாட்டு என்றாலும் அது தொடர்பில் தற்போதைய அரசாங்கம், கடந்த அரசாங்கத்தின் மீது குற்றம் சுமத்துவதனை வாடிக்கைக் கொண்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

ஜப்பான் வாகனங்களுக்கான விலைகள் உயர்த்தப்பட்டுள்ளமை குறித்தும் அவர் இங்கு கருத்து வெளியிட்டுள்ளார்.

அரசாங்கம் சில நாடுகளை இலக்கு வைத்து வாகனங்களுக்கான வரி கொள்கைகளை பின்பற்றுவதாகவும் சில நாடுகளிலிருந்து இறக்கமதி செய்யப்படும் வாகனங்களுக்கான வரி அதிகரித்துள்ளதுடன், சில நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் வரி குறைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

மைத்திரிபால சிறிசேன அரசாங்கம், பழிவாங்குவதில் அதிக சிரத்தை எடுத்துக்கொள்வதாகவும் நாட்டின் அபிவிருத்தியில் கவனம் செலுத்தவில்லை எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

தமது அரசாங்க ஆட்சிக் காலத்தில் மொத்தச் செலவுகள் 5000 மில்லியன் எனவும், இந்த அரசாங்கம் ஒரு அண்டில் 7000 மில்லியனை செலவிட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

No comments:

Post a Comment