வடமாகாணத் தமிழ் மந்திரியார் ஒருவர் தம் அரசின் நடப்பு ஆட்சிப் பிரதிநிதிகள்.. இனவாதம் அற்றவராம் என்றே திடமாகக் கூறிய அறிக்கையொன்று எமது தினசரிகளின் உன்னிய கவனிப்போடு கனமான
தலைப்போடு காட்சிதரப் படித்து, மாறாத மனப்பாதிப்புற்றோம் பாரும்;!
தலைப்போடு காட்சிதரப் படித்து, மாறாத மனப்பாதிப்புற்றோம் பாரும்;!
ஏற்ற மென்னவெனில் எம் தமிழ் அரசியலாளர் பலர் கூட வாசத்தமிழ் மணமிழந்த தொருசடத்துவத் தமிழ்ப் பிரதிநிதிகள் என்ற தரவுக்கு உட்பட்டு, தம்பாட்டுக்குப் பின்பாட்டுக்காரராய் வாழ்க்கையைக் கழித்து, தமிழ் இனவாதம் சற்றுமற்ற சற்குருக்களாய் தம்மைமாற்றிக் கொண்டு சும்மா
சொற்றிறன்; மட்டும் காட்டிப் பேசியேவண்டியை ஓட்டும் ஒரு ஒப்பந்தக்காரராய் உலாவருகையில் இப்படித்தான் அடிக்கடி அறிகைகள் விடவேண்டுமாம்!
எட்டுத்திசையிலும்கொட்டிச்சிதறிய எம்மவரின் பட்டுமேனித்துகள்கள்பரவிய மண்ணில்.. அள்ளியள்ளி எரித்தபோதும் எஞ்சிய அவரின் வெள்ளெலும்புப் கூர்கள் நிமிர்ந்து மின்னும்..முள்ளிவாய்க்காலில்…
பாதங்கள் மிதித்துநின்று பக்குவமாய் கண்களைமூடியபடி தொழுது அழுது..மலர்களை அள்ளியள்ளித் தூவினார்களே!
இவை எள்ளளவும் நினைவில் இல்லையா?
வானைத் தொடுமளவு பறந்நு பறந்து வகைவகையாய் மிகையுறு விசவாயுக் குண்டுமழையைக் கொட்டுவித்தவர்கள் எல்லாம் இன்று இனவாதம் சற்றுமற்றபுனிதச்சாதுக்களாகிவிட்டார்களா.அந்தச்சங்கதிதான் என்னவென்று கூற்றம் புரிந்தவரைப் புனிதராக்கிப் போற்றும் இவர்தான் சாற்றிடல்வேண்டும்!
வானைத் தொடுமளவு பறந்நு பறந்து வகைவகையாய் மிகையுறு விசவாயுக் குண்டுமழையைக் கொட்டுவித்தவர்கள் எல்லாம் இன்று இனவாதம் சற்றுமற்றபுனிதச்சாதுக்களாகிவிட்டார்களா.அந்தச்சங்கதிதான் என்னவென்று கூற்றம் புரிந்தவரைப் புனிதராக்கிப் போற்றும் இவர்தான் சாற்றிடல்வேண்டும்!
தொல்லிலங்கைக் காலத்திலிருந்து தொடரும் சிங்களத்தின் வெங்கொடும்இனவாதத் தமிழ்வேள்வியும்,..ஒல்காப் பெரும் பகையும் ஒடுங்கியதாய் எந்தவரலாறுஇயம்பியதாய் இல்லையே!
ஈழத்தமிழினத்;தைஅழித்துமுடிக்கும் ஊழிமிகுநோக்கில் உட்கனன்ற மூற்கமாய்.. வேக்காட்டுவெறியோடு வளர்ந்தஆதிக்கவாதச் சிங்கள அரசியலாளர்கள் தமக்குள்மோதிக்கொண்டாலும்…தமிழரெம் தாயகத்தைப் பறித்தெடுப்பதில் குறிதவறாது தம் மகாவம்சம் காட்டும்நெறியோடு நிரையேறி நடக்கையிலே என்ன இவர் ஏதேதோ பேசுகின்றார்!
அம்பாறையும் மட்டுநகரோரப் பிர்pரதேசங்களும் திருமலையில் சரிபாதியும்,மணலாறும்வவுனியாவும், மன்னாரின் கசுத்தோட்டமும், கிளிநொச்சி நகரும் என்றேல்லாம்நகரும் சிங்களக் குடியேற்றங்கள் குறித்து எங்கனும் ஏதும் எம்மவரின் அறிக்கைகள் எதிற்புக்கள் முனைப்புமிகப் பிறக்காததால் நாவற்குளியும்விறுவிறுப்பாய்நாள்தோறும்வீறாப்போடு நம்மவரை விரட்டி விரட்டி.. இனவாத் திமிரோடு பறித்தெடுக்கப்படுகின்றதே மறுவாழ்வு அற்றவராய் எம் மக்களங்கே திக்குத்திணறித் திண்டாடும் இவ்நோக்கைஇனவாதமின்றி என்னவென்று சொல்லுவது!
குற்றங்கள்யாவையும் செத்தவர் மேல் திணித்து, மற்றவர்பேசாது தடுத்துச் சத்தமறமூடிவிட்டு,சுத்தப் பௌத்த சீலர்களாகியவர் ஆளும்தேசம் இதுவெனச் சாத்தான்கள் வேத வேதமோதுவதைப் படிக்கையிலே, வேதனைக்கூர்மை குத்துகின்றது!
இனத்தோடு மொழிநாடு மூன்றன்பாலும் ஏற்றமிகு பற்றுதனை வைக்குமாறும், சினத்தோடை ஏழையரைத் தின்றுவாழும் தீதுடைய தனிநலனைப் போக்குமாறும் மானத்தோடு மங்கையர்தம் மாப்புரட்சி எம்மண்ணில் மேன்மையோடு மென்மேலும் பெருகுமாறும்..
ஓவியம் வரைந்தாலும், உரைநடை செய்தாலும் காவியம்பாடினாலும் ஆவலாய்ச் சொந்தமண்ணின் மான்பினைக்கூறவேண்டும் என்று, கூறிய வீரரெல்லாம் காவலாய் ஆண்டமண்ணில் இன்று ஏவலர் தாளம்போட்டுத் தருக்கரைப்பாடும்போது,மனவருத்தமே வருகின்றது!
-ந. கிருஷ்ணசிங்கம்-
No comments:
Post a Comment