June 29, 2016

ரணில் , சுமந்திரன் படங்களை பொறித்த பதாதையை கண்ட ஈ.பி.டீ.பியினர் ஆர்ப்பாட்டம்!

ரணில் , சுமந்திரன் படங்களை பொறித்த பதாதையை கண்ட ஈ.பி.டீ.பியினர் ஆர்ப்பாட்டத்தில் அரசியல் வாதிகளின் படம் தூக்கக்கூடாது என நல்லூரான் முற்றத்தில் கூச்சல் குழப்பத்தை விளைவிக்க முற்பட்டனர்.


வலி வடக்கு மக்களை சொந்த இடத்தில் குடியமர்த்தக்கோரி வலி வடக்கின் இடம்பெயர் அமைப்புக்கள் ஏற்பாடு செய்த ஆர்ப்பாட்ட பேரணியின் ஆரம்பத்தில் தாங்கி நின்ற பதாதைகளில் பிரதமர் ரணில் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ.சுமந்திரன் படம்பொறித்த ஆர்ப்பாட்டம் தொடர்பான வாசகம் எழுதப் பட்ட பதாகை ஒன்றினை ஏந்தி நின்றவர்களுடன் அரசியல் வாதிகளின் படத்தை தாக்கிய பதாகை ஏந்தக்கூடாது என குழப்பம் விளைவிக்க முற்பட்டனர்.

குழப்பத்தினை தவிர்க்கும் பொருட்டு பதாகை  பின்னகர்த்தப்பட்டமையினால் ஏற்படவிருந்த அசம்பாவிதம் தவிரக்கப்பட்டது. இருப்பினும் அப்பதாகையில்  உள்ள வசணமானது,

16-02-2013ல் மயிலிட்டி மக்களின் உண்ணாவிரத்த்தில் ரணில் விக்கிரமசிங்கா தான் ஆட்சிக்கு வந்தால் எங்களை மீளகுடியேற்றுவேன் என்று உறுதிமொழி அளித்தவர் பிரதமர் ஆகியும் ஏன் முன்னெடுக்கவில்லை. மக்கள் விசனம். என்ற வாக்கியமே எழுதப்பட்டிருந்த்து.

இதனை ஏந்தி நின்ற சில பொது மக்களிடம் இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது தொடர்பில் கேட்டபோது , இதில் இருப்பது கூட்டமைப்பின் பிரதிநிதிகளும் , பிரதமரும் என்பதனால் ஈ.பி.டி.பீ யினர் எதிர்க்கத்தான் செய்வார்கள் அவர்கள் ஆதரிப்பது மகிந்த ராயபக்சாவை என்பதன் வெளிப்பாடே.
இந்த இடத்தில் அரசியல் முக்கியமல்ல வலி. வடக்கு மக்களின் பிரச்சணைக்கு தீர்வே முக்கியம். என்றனர்.

No comments:

Post a Comment