இலங்கையின் யுத்தக்குற்றம் தொடர்பிலான பொறுப்புக்கூறலின்போது சர்வதேச தலையீடுகள்அவசியமற்றவை என்று ரஸ்யா தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 32ஆவது அமர்வில் இன்று உரையாற்றிய ரஸ்யபிரதிநிதி, இலங்கை தமது உள்நாட்டு பிரச்சினையை தாமே தீர்த்துக்கொள்ள அனுமதிக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
எனினும் அமரிக்கா, பிரித்தானியா, நோர்வே, கானா மற்றும் மெசடோனியா ஆகிய நாடுகள் இலங்கை இன்னும் தமது அர்ப்பணிப்பை காட்டவேண்டும் என்று கோரிக்கை விடுத்தன.
மெசடோனியா தமது கருத்தில், நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் என்ற குறித்த காலஎல்லைக்குள் நிறைவுறுத்தப்படல் வேண்டும் என கூறியுள்ளது.
அத்துடன், வாய்ப்புக்களை காலவரையறையற்ற வகையில் நீடித்துச்செல்லக்கூடாது என்றும் வலியுறுத்தியது.
No comments:
Post a Comment