June 29, 2016

ஐரோப்பிய யூனியனின் மொழியில் ஆங்கிலம் நீக்கம் விரைவில் விலகவும் தீர்மானம்!

ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலகியுள்ளதால், யூனியனின் அதிகாரப்பூர்வ மொழியில் இருந்து ஆங்கிலம் நீக்கப்பட்டுள்ளது.
மேலும், பிரிட்டன் விரைவாக வெளியேற வேண்டும் என்று யூனியன் நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலகுவது தொடர்பாக, சமீபத்தில் அங்கு நடந்த வாக்கெடுப்பில் 52 சதவீதம் பேர் ஆதரவாக வாக்களித்தனர்.

இதனால் ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலகுகிறது. ஐரோப்பிய யூனியனில் இருந்து ஒரு நாடு விலகுவது இதுவே முதல்முறை. இந்நிலையில் இதுகுறித்து பிரிட்டன் நாடாளுமன்றம் நேற்று கூடி ஆலோசித்தது.

இதில் ஐரோப்பிய யூனியன் கூட்டமைப்பில் இருந்து விரைவாக பிரிட்டன் விலகவேண்டும் என்று வரைவு மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக பிரிட்டன் பிரதமர் டேவிட் கேம்ரூனிடம் விளக்கப்பட்டது. ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலகுவதால் சர்வதேச நாடுகளில் பணம், கச்சா எண்ணை பாதிப்பு ஆகியவை குறித்து விளக்கப்பட்டது.

கேம்ரூன், அக்டோபர் மாதம் வரை பதவியில் இருக்கிறார். அவர் பதவி விலகிய பின்புதான் பிரிட்டன் விலகல் நடைமுறைக்கு சாத்தியமாகும் என்று தெரிகிறது. இந்நிலையில், ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலகுவதால், ஆங்கில மொழிக்கும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ஐரோப்பிய யூனியனின் முதல் அதிகாரப்பூர்வ மொழியாக ஆங்கிலம் இருந்தது. இதுதான் தொடர்பு மொழியாக, இந்த யூனியனில் இடம்பெற்றுள்ள நாடுகளிடையே பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால், தற்போது பிரிட்டன் விலகியுள்ளதை தொடர்ந்து, அதிகாரப்பூர்வ மொழியில் இருந்து ஆங்கிலம் நீக்கப்பட்டுள்ளது.

இந்த யூனியனில் உள்ள ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு மொழிகள் வழக்கத்தில் உள்ளன. அவற்றையே பயன்படுத்த அந்நாடுகள் முடிவு செய்துள்ளன. இதற்கிடையே யூனியனுக்கு எதிராக வாக்களித்தவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.இதனால் பலர் தங்கள் பாஸ்போர்ட்டுடனேயே வெளியே செல்கின்றனர்.

தலைவர்கள் எதிர்ப்பு

ஐரோப்பிய யூனியனின் கூட்டம் பெல்ஜியம் நாட்டின் பிரசல்ஸ் நகரில் நேற்று நடந்தது. இதில் கலந்து கொள்ள பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் வந்தார். அப்போது ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் கூடிய விரைவில் வெளியேற வேண்டும் என ஐரோப்பிய யூனியன ்தலைவர்கள் வலியுறுத்தினர். ஐரோப்பிய யூனியன் தலைவர் டொனால்ட் டஸ்க் கூறுகையில், ‘‘பிரிட்டனை விவாகரத்து செய்ய ஐரோப்பிய யூனியன் இன்றே தயார். வெளியேறும் நடவடிக்கையை பிரிட்டன் கூடிய விரைவில் மேற்கொள்ள வேண்டும்’’ என்றார்.

ஐரோப்பிய யூனியன் தலைவர் ஜேன் கிளாட் ஜங்கர் பேசுகையில், ‘‘கேமரூன் நேரத்தை வீணடிக்க வேண்டாம். இங்கு என்ன நடக்க வேண்டும் என்பதை நாங்கள்தான் முடிவு செய்வோம். வெளியேற விரும்புபவர்கள் முடிவு செய்ய முடியாது’’ என்றார்.

ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் தன் நாட்டு நாடாளுமன்றத்தில் பேசுகையில், ‘‘ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேற முடிவெடுத்த பிரிட்டன் அதற்கான விலையை கொடுத்தாக வேண்டும்’’ என்றார்.

No comments:

Post a Comment