June 17, 2016

கைப்பற்றப்படும் போதைப் பொருட்கள் எங்கே செல்கின்றன?

இலங்கை போதை வர்த்தகத்தின் மத்திய நிலையமாக கருதப்படும் அளவுக்கு நாளுக்குநாள் போதைப் பொருட்கள் கைப்பற்றப்படுகின்றன.


எனினும் இந்த வியாபாரத்தினை செய்பவர்கள் எவ்வித தங்கு தடையுமின்றி இந்தசட்டவிரோத வரத்தகத்தை வலைப்பின்னலூடாக செய்து வருகின்றமையை யாராலும் தடுக்கமுடியாமல் உள்ளது.

இவ்வாறு இலங்கையில் நாள் தோறும் பெருமளவான ஹெஹோயின் உள்ளிட்ட போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டும், அந்த விநியோகம் ஏதோ ஒரு வகையில்நடைபெற்றுக்கொண்டு தான் இருக்கின்றது என அகில இலங்கை சுங்க சேவை ஒன்றியத்தின்செயலாளர் ஜே.ஏ.குணதிலக தெரிவித்துள்ளார்.

இதேவேளை கைப்பற்றப்படும் போதைப் பொருட்களை பரிசோதனைகளுக்குப் பிறகு முற்றாகஅழித்து விடுமாறு ஜனாதிபதி அவசரமாக சுங்கப்பிரிவினருக்கு வேண்டுகோள்விடுத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த போதை வியாபாரத்திற்கு பாதாள உலகத்தினரும், அரசியல்வாதிகளும்சம்பந்தப்பட்டுள்ளதாகவும், எனவே கைப்பற்றப்படும் போதைப் பொருட்களை தமது பலத்தைபயன்படுத்தி மீண்டும் பெற்றுக் கொள்வதற்கு பலர் முன்வருவதாகவும் அகில இலங்கைசுங்க சேவை ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கடந்த காலங்களில் இலங்கையில் கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்கள் மூலம்சர்வதேச போதை சந்தையில் போதைப் பொருட்களுக்கு தட்டுபாடு இல்லை என்பதைஎடுத்துக் காட்டுவதாகவும் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment