முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு, 25 வருடங்களாக சிறையில் வாடும் ஏழு பேரின் விடுதலைக்காக வருகிற 11ம் தேதி வேலூரில் இருந்து சென்னைக்கு வாகனப் பேரணி நடக்க இருக்கிறது.
பேரறிவாளனின் தாய் அற்புதம் அம்மாள் தலைமையில் நடக்கவிருக்கும், இந்தப் பேரணிக்காக அரசியல் கட்சி பிரமுகர்கள், திரையுலகினர் குரல் கொடுத்து வருகின்றனர்.
நடிகர்கள் சத்யராஜ், விஜய் சேதுபதி, கலையரசன், இயக்குநர்கள் ரஞ்சித், நவீன்,ராம் என திரையுலகின் முக்கிய பிரமுகர்கள் அனைவரும், ஏழு பேரின் விடுதலைக்காக பேசி வருகின்றனர்.
இந்நிலையில், இதுபற்றிப் பேசும் நடிகை ரோகிணி, பேரறிவாளன் சிறை சென்று 25 வருடங்கள் முடிந்துவிட்டன. இந்தப் பிரச்சினையில், சரி தவறு என்பதைத் தாண்டி மனிதத்தன்மையோடு அணுக வேண்டும்.
25 ஆண்டுகள் முடிந்துள்ள நிலையில், பேரறிவாளன் உள்பட மற்ற ஆறு பேரின் விடுதலையை மிக முக்கியமான நிகழ்வாகப் பார்க்கிறேன்.
தன்னுடைய மகனின் விடுதலைக்காகப் போராடும் அற்புதம் அம்மாளின் போராட்டத்தை நாம் பார்த்துக் கொண்டு வந்திருக்கிறோம். அம்மாவின் போராட்டத்தைப் பார்த்தவாறே, அதைக் கடந்தும் போய்விடுகிறோம்.
ஆனால், இது கடந்து போகக் கூடாத நிகழ்வு. தமிழக அரசு நமக்குத் துணையாக இருக்கிறது. ' அவர்கள் வெளியே வர வேண்டும்' என்பதில் அரசும் உறுதியாக இருக்கிறது. அவர்கள் ஏழு பேரையும் விரைவில் விடுதலை செய்ய வேண்டும் என்பதை அரசுக்கு பிரார்த்தனையாக முன் வைக்கிறேன்.
இந்தப் பேரணியில் கலந்து கொள்வதற்கு அனைவரும் திரளாக வர வேண்டும். ' நாங்கள் இருக்கிறோம்' என்று அற்புதம் அம்மாளுக்கு நாம் சொன்னாலும், அவருடைய குழந்தை வெளியே வந்தால்தான் அந்தத் தாயின் மனதை ஆற்ற முடியும்.
ஏழு பேரின் குடும்பத்தின் எதிர்காலமும் இவர்களின் விடுதலையை ஒட்டித்தான் இருக்கிறது. வாகனப் பேரணியில் திரளாகப் பங்கேற்பதன் மூலம், நமது மனஉறுதியை வெளிப்படுத்த வேண்டும்.
நாங்கள் உங்களுக்குத் துணையாக இருப்போம்' என அற்புதம் அம்மாளிடம் சொல்லியிருக்கிறேன். பேரணியில் சந்திப்போம்" எனப் பேசியிருக்கிறார் நடிகை ரோகிணி.
இதையடுத்துப் பேசும் இயக்குநர் வெற்றி மாறன், எந்த ஒரு தண்டனையாக இருந்தாலும், 25 வருடங்கள் தனிமைச் சிறையில் கழிக்க வேண்டிய அவசியம் இல்லை.
இத்தனை காலமும் அவர்கள் விடுதலை செய்யப்படாமல் உள்ளனர். அவர்களின் விடுதலைக்காக தமிழக முதல்வர் சில முயற்சிகளை எடுத்திருக்கிறார்.
வருகிற 11-ம் தேதி முதல்வரை சந்தித்து மனு கொடுக்க நாங்கள் வருகிறோம். எங்களோடு நீங்களும் இந்தப் பேரணியில் பங்கேற்க வேண்டும் என வேண்டுகோள் வைக்கிறார்.
மனிதநேயத்தை முன்வைத்து நடக்கவிருக்கும் வாகனப் பேரணியின் வெற்றிக்காக, அனைத்து அரசியல் கட்சிகளும் குரல் கொடுக்க வேண்டும்' என வேண்டுகோள் வைக்கின்றனர் பேரணி அமைப்பாளர்கள்.

No comments:
Post a Comment