தென் ஆபிரிக்கா KWala Zulu மாநிலத்தில் கிளைர்வூத் தமிழ்க் கல்வி மையத்தினாலும் தமிழ் இளையோர் அமைப்பினராலும்
முள்ளிவாய்கால் தமிழின அழிப்பில் கோரமாக படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்கள் நினைவாகவும், அத்துடன் சிறிலங்கா சுதந்திரம் அடைந்ததில் இருந்து இன்று வரை படுகொலை செய்யப்பட்ட மக்களுக்காகவும்,அத்துடன் தொடர்ச்சியாக நடைபெறும் கட்டமைப்புசார் இன அழிப்புக்கு கண்டனம் தெரிவித்தும் 25ம் திகதி மே மாதம் 2016 ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நடாத்தப்பட்டது.
இவ் வணக்க நிகழ்வுக்கு சிறப்பு பேச்சாளர்களாக திரு ரிச்சர்ட் கௌவெண்டெர் மற்றும் திரு டீஸ் பிள்ளை கலந்து கொண்டு தமிழினப் படுகொலை பற்றிய முக்கிய குறிப்புகளை மையப்படுத்தி தமது உரைகளை ஆற்றி இருந்தனர்.
இவ் நினைவேந்தல் நிகழ்வை இளையோர் அமைப்பை உறுப்பினர்கள் ஆகிய வைஜெச்வரி ரெட்டி, பிரஷாந்த பிள்ளை, சுவஷ்ண மினிசாமி, தமியன் ரெட்டி, டேஜச்வின் நாய்டு அனைவரும் இணைந்தே இன்றைய கால சூழலில் தமிழின அழிப்பை உலகமையப்படுத்த வேண்டும் என்ற காரணத்தால் ஒழுங்குசெய்தது குறிப்பிடத்தக்கது.
நினைவேந்தல் நிகழ்வை பிரஷாந்த பிள்ளை அவர்கள் ஆரம்பித்துவைத்து தமிழின அழிப்பு இன்றைய உலக சூழலில் ஏன் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டும் என்பதை விளக்கி உரையாற்றினார்.
முள்ளி வாய்க்கால் படுகொலை, சனல் 4 ன் (Killing Fields ) ஆவணப்படத்துடன் தமிழினப் படுகொலை எவ்வாறு மனிதநேயமற்ற முறையில் சிங்கள பேரினவாத அரசால் நடாத்தப்பட்டது என்பதையும் காண்பிக்கப்பட்டது.
டீஸ் பிள்ளை தனது உரையில் தமிழின அழிப்புக்கு எதிராக உலகத் தமிழர்கள் மற்றும் அனைத்து மக்களும் இணைந்து அதற்குரிய ஆதரவு தளத்தை உருவாக்க வேண்டிய அவசியத்தையும் எடுத்துரைத்தார்.
சர்வதேச தமிழர் பண்பாட்டு மையம் சார்பாகவும், அனைத்துலக ஈழத்தமிழர் சார்பாகவும் சிறப்புரைகள் வாசிக்கப்பட்டது.தமிழ் மொழியை வளர்க்க CTI மற்றும் இளையோர் அமைப்பு இவ் முயற்சியில் இறங்கி இருப்பது எல்லோராலும் பாராட்டப்பட்டது.
சிறப்பு பேச்சாளராக kwala zulu தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக பேசிய திரு ரிச்சர்ட் கவுண்டர் தமிழ் மக்களின் விடுதலை போராட்டத்தில் தமது கடந்த கால செயற்பாடுகளை பற்றி பேசியதோடு இன்றும் அதை வேகமாக முன்னெடுக்க வேண்டிய அவசியத்தை விளக்கினார். இன்றும் கட்டமைப்புசார் இன அழிப்புக்கு உள்ளாகி வரும் ஈழத் தமிழர்களையும் – தமிழ் மொழியையும் பாதுகாக்க இளையோர்களின் பங்களிப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
நினைவேந்தல் நிகழ்வின் இறுதியில் இளையோர் அமைப்பை சார்ந்த வைஜெச்வரி ரெட்டி மற்றும் தாமின் ரெட்டி உரையாற்றும்போது ஒவ்வொரு மனிதனும் பிறக்கும் போது அவர்களுக்கு தனித்துவமான உரிமைகள் இருக்கிறது அதை பாதுகாக்க தென் ஆப்ரிக்கா மக்கள் எவ்வாறு போராடினார்களோ அதேபோல் எல்லா மக்களினதும் உரிமைகளை பாதுகாக்க நாம் எல்லோரும் சேர்ந்து போராட வேண்டிய அவசியத்தை விளக்கி, ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டத்துக்கு ஒருங்கிணைந்து குரல் கொடுக்கும்படி கேட்டுக்கொண்டார்கள்.
நினைவேந்தல் நிகழ்வு படுகொலை செய்யப்பட்ட மக்கள் நினைவாக ஒலிக்கபட்ட பாடலுடன் நிறைவு பெற்றது.

No comments:
Post a Comment