கனடாவின் பாதுகாப்புப்படை, காவல்துறை ஆகியவற்றில் கால்பதித்து வரும் பெரும்பாலான தமிழர்களில் ஒருவர் துணைப் பொலிஸ்மா அதிபராக தெரிவு செய்யப்பட்டு கனடியத் தமிழருக்கு பெருமை சேர்த்துள்ளார்.
ஹால்ரன் பிரதேச பொலிஸ் சேவையில் கான்ஸ்டபிள் பதவியில் இணைந்து தனது திறமைகளில் சார்ஜன்ட் மற்றும் ஒருங்கிணைப்பாளர், பொறுப்பதிகாரி, பொலிஸ் அத்தியட்சர் போன்ற பதவிநிலைகளை வகித்த நிசாந்தன் துரையப்பா தற்போது துணைப் பொலிஸ்மா அதிபராகத் தரமுயர்த்தப்பட்டிருக்கின்றார்.
இதற்கான உத்தியோகபூர்வ அறிவித்தலை ஹால்ரன் பொலிஸ் திணைக்களம் கடந்த வார இறுதியில் வெளியிட்டுள்ளது.
அதில் புதிய குடிவரவாளரான நிசாந் துரையப்பா ஏனைய இனங்களிற்கும் முன்னுதாரணமாக இருந்திருக்கின்றார் என்ற விடயமும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண முன்னைநாள் அல்பிரட் துரையப்பா அவர்களின் பெறாமகனான இவர் தனது மூன்று வயதிலேயே கனடா வந்தவர் என்பதும் தான் வசித்த பிரதேசத்திலுள்ள தொண்டார்வ நிறுவனங்களிலும் தன்னை இணைத்துச் செயற்பட்டு உதவி வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஹால்ரன் பிரதேசத்திலுள்ள பல்லிண சமூகத்தினரிடையே மிகவும் பிரபல்யமான ஒரு அதிகாரியாக இருக்கும் நிசாந் துரையப்பா புதிய குடிவரவாளர்களிற்கான பல திட்டங்கைள அப் பிரதேசத்தில் அறிமுகப்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment