கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள தமது புகைப்படம் அடங்கிய பதாதைகளை அகற்றுமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.
கொழும்பு மாநகர மேயரை தொடர்புகொண்டு, ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து கொழும்பில் காணப்படும் ஜனாதிபதியின் புகைப்படங்கள் தாங்கிய பதாதைகள் உடன் அகற்றப்பட்டதோடு, புறநகர் பகுதிகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பதாதைகளை அகற்றும் நடவடிக்கையும் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.
நகரின் சுற்றாடல் பாதிப்பை கருத்திற்கொண்டு, ஜனாதிபதி இந்த உத்தரவை பிறப்பித்ததாக தெரியவருகின்றது.
கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்திலும், தமது உருவப்படங்கள் தாங்கிய பதாதைகள் மற்றும் சுவரொட்டிகளை காட்சிப்படுத்த வேண்டாமென ஜனாதிபதி தமது ஆதரவாளர்களிடம் கேட்டுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.


No comments:
Post a Comment