சர்வதேச விசாரணை வேண்டும் என்பதை வலியுறுத்தி சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறைக்கான தமிழர் செயற்பாட்டுக் குழுவின் ஏற்பாட்டில் இரண்டாவது நாளாகவும் இன்று கையெழுத்துப் பெறும்
போராட்டம் மட்டக்களப்பில் நடாத்தப்பட்டது.
போராட்டம் மட்டக்களப்பில் நடாத்தப்பட்டது.
மட்டக்களப்பு நகரிலுள்ள காந்திப் பூங்காவுக்கு முன்னாள் நேற்று புதன்கிழமை மாலை கையெழுத்து வேட்டை பெறும் போராட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதனை மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் அருட்கலாநிதி பொன்னைய்யா ஜோசப் ஆரம்பித்து வைத்தார்.
இதில் மட்டக்களப்பிலுள்ள சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் கையொப்பமிட்டனர்.
இதில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இரண்டு இலட்சம் பேரின் கையொப்பங்களை திரட்டவுள்ளதாக சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறைக்கான தமிழர் செயற்பாட்டுக் குழுவின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் பொறியியலாளர் அலன் சத்தியநாதன் தெரிவித்தார்.
இன்று வியாழக்கிழமை நகரின் மாநகர சந்தை சதுக்கம், புகையிரத நிலையம், பஸ்நிலையம் உட்பட பல இடங்களில் கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த கையெழுத்துப் பெறும் போராட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட மக்கள் பெரும் ஆர்வம் காட்டிவருகின்றனர்.
No comments:
Post a Comment