September 5, 2015

இலங்கை இராணுவத்தினர் பாலியல் வல்லுறவை யுத்த ஆயுதமாக ஹிலாரி எதிர்த்தார்.!

இலங்கை இராணுவத்தினர் பாலியல் வல்லுறவை யுத்த ஆயுதமாக, தந்திரோயமாக பயன்படுத்துவது குறித்து அமெரிக்காவின் முன்னாள்
வெளிவிவகார அமைச்சர் ஹிலாரி கிளின்டன் வெளியிட்ட கருத்துகளிற்கு இலங்கை கடும் எதிர்ப்பு வெளியிட்டமை தற்போது பகிரங்கப்படுத்தப்பட்டுள்ள ஹிலாரியின் மின்னஞ்சல்கள் மூலம் தெரியவந்துள்ளது.
2009 செப்டம்பர் 30 திகதி ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் ஹிலாரி பாலியல் வல்லுறவு இலங்கை, பர்மா, பொஸ்னியா மற்றும் வேறு சில நாடுகளில் யுத்த தந்திரோபாயமாக பயன்படுத்தப்பட்டதாக குறிப்பிட்டார்.
இதற்கு இலங்கை கடும் எதிர்ப்பை வெளியிட்டதுடன் உத்தியோகபூர்வமாக தனது எதிர்ப்பை வெளியிட்டது.
இலங்கை அரசாங்கம் ஓக்டோபர் 2 ம் திகதி தனது உத்தியோகபூர்வை எதிர்ப்பை வெளியிட்டமை ஹிலாரியின் மின்னஞ்சல்கள் மூலம் தெரியவந்துள்ளது.
இலங்கை சர்வதேச சமூகத்தின் பொதுக் கருத்துடன்பாட்டுடனேயே விடுதலைப்புலிகளை தோற்கடித்தது, நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு அதற்கு கால அவகாசத்தை வழங்கவேண்டும் என கொழும்பு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment