இலங்கையில் கடந்த ஜனவரி 8 ம் திகதி புதிய அரசாங்கம் உருவாக்கப்பட்டுள்ள நிலையிலும், தமிழர்களுக்கு எதிரான துன்பங்களும், சித்திரவதைகளும் தொடர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய அரசாங்கம் ஏற்படுத்தப்பட்டதன் பின்னரான காலப்பகுதியில் இதுவரையில் தமிழர்களுக்கு எதிராக இராணுவத்தினர் செயற்பட்ட 11 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
குறித்த சம்பவங்கள் வாக்குமூலத்தின் ஊடாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக IBJP என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்டவர்கள் தற்போது வெளிநாடுகளுக்கு சென்று, அங்குள்ள சட்ட வைத்தியர்களிடமும், சர்வதேச வைத்திய நிபுணர்களிடமும் சிகிச்சைகளையும், ஆலோசனைகளையும் பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் தொடர்பான புகைப்படங்கள் தற்பொழுது வெளியாகியுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது
No comments:
Post a Comment