September 8, 2015

அனுராதபுர விமான நிலையத் தாக்குதல்!- சி.ஐ.டி பொறுப்பதிகாரிகளுக்கு நீதிமன்றம் அழைப்பாணை!

அனுராதபுரம் விமான நிலையம் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதல் குறித்த விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கத் தவறிய இரகசியப் பொலிஸ் பொறுப்பதிகாரிகள் இருவரை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த 2007 ஆம் ஆண்டு ஒக்ரோபர் 22 ஆம் திகதி அனுராதபுரம் விமான நிலையத்தை தமிழீழ விடுதலைப் புலிகள் தாக்கினர். இதன்போது 10 விமானங்கள் முழுமையாக அழிக்கப்பட்டன. அத்துடன் 6 விமானங்கள் சேதமடைந்தன. விமானப் படைப் படையினர் 14 பேர் கொல்லப்பட்டனர்.
இந்தத் தாக்குதல் குறித்து விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு அனுராதபுரம் விசேட மேல் நீதிமன்றம் இரகசியப் பொலிஸாருக்கு உத்தரவிட்டிருந்தது. எனினும் விசாரணை அறிக்கையை இரகசியப் பொலிஸார் நீதிமன்றுக்கு சமர்ப்பிக்கவில்லை. இந்நிலையில் குறித்த கட்டளையை மீறியமை தொடர்பில் எதிர்வரும் ஒக்ரோபர் 10 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகி விளக்கமளிக்குமாறு இரகசியப் பொலிஸ் பொறுப்பு அதிகாரிக்கும், விசாரணைப் பிரிவுப் பொறுப்பதிகாரிக்கும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
அனுராதபுரம் விமான நிலையம் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதல் குறித்த விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கத் தவறிய இரகசியப் பொலிஸ் பொறுப்பதிகாரிகள் இருவரை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த 2007 ஆம் ஆண்டு ஒக்ரோபர் 22 ஆம் திகதி அனுராதபுரம் விமான நிலையத்தை தமிழீழ விடுதலைப் புலிகள் தாக்கினர். இதன்போது 10 விமானங்கள் முழுமையாக அழிக்கப்பட்டன. அத்துடன் 6 விமானங்கள் சேதமடைந்தன. விமானப் படைப் படையினர் 14 பேர் கொல்லப்பட்டனர்.
இந்தத் தாக்குதல் குறித்து விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு அனுராதபுரம் விசேட மேல் நீதிமன்றம் இரகசியப் பொலிஸாருக்கு உத்தரவிட்டிருந்தது. எனினும் விசாரணை அறிக்கையை இரகசியப் பொலிஸார் நீதிமன்றுக்கு சமர்ப்பிக்கவில்லை. இந்நிலையில் குறித்த கட்டளையை மீறியமை தொடர்பில் எதிர்வரும் ஒக்ரோபர் 10 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகி விளக்கமளிக்குமாறு இரகசியப் பொலிஸ் பொறுப்பு அதிகாரிக்கும், விசாரணைப் பிரிவுப் பொறுப்பதிகாரிக்கும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment