திருகோணமலை கிதுல்லுது கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட கிராம சேவக உத்தியோகத்தரை எவ்வித காரணமும் இன்றி இடமாற்றம் செய்தமையை கண்டித்தும் இன்று பிரதேசவாசிகளால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
குறித்த உத்தியோகத்தரை மீள பெற்றுத்தரக் கோரி பிரதேசவாசிகள் இன்று காலை 10.00 மணியளவில் திருகோணமலை மாவட்ட செயலகத்தின் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
கடந்த ஒரு வருடகாலமாக அப்பகுதியில் சேவையில் ஈடுபட்டிருந்த கிராம சேவையாளர் ஆர்.எம்.பி. நந்ததாஸ அவர்களை, கடந்த 27.08.2015ம் திகதி எவ்வித காரணமும் இன்றி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் மேற்குறிப்பிட்ட கிராம சேவையாளர் பணியிலிருந்த காலப்பகுதியில் மக்களுக்கு பல்வேறுபட்ட உதவிகளை செய்வதாகவும் அவரை மீளப்பெற்று தரக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகவும் பிரதேசவாசிகள் கருத்து தெரிவித்தனர்.

No comments:
Post a Comment