August 1, 2015

கிளிநொச்சி பாடசாலைகளில் நடந்ததும் நடப்பதும் என்ன? ஒளிப்படத்துடன் இதோ ஆதாரம்!

தனிநபர்களின் அரசியல் நலன்களுக்காக மாணவர்களின் கல்வி கற்கும் உரிமை பறிக்கப்படுகிறதா?பளைப்பிரதேசத்தில் தேர்தல் விதிமுறைகளை மீறி பாடசாலை மாணவர்களை தனக்கான தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுத்தி
வருகிறார் இலங்கை தமிழரசுக்கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்.
கடந்த 30.07.2015 வியாழக்கிழமை அன்று, பளை மத்திய கல்லூரி மாணவர்கள் பாடசாலை நேரத்தில் காலை 11.00 மணியளவில் பகிரங்கமாகவே பாடசாலை சீருடையுடன் தேர்தல் பரப்புரையில் ஈடுபடுத்தப்பட்டனர். இதைக்கண்ட பொதுமக்கள் மாணவர்களைக் கண்டித்தனர். மாணவர்களின் பெற்றோர்களும் ‘பள்ளிக்கூடம் போறன் எண்டு சொல்லிப்போட்டு நோட்டீஸ் குடுத்துக்கொண்டு திரியுறுறீயோ. பொறு அதிபரிட்ட வந்து கதைக்கிறன்.’ என்று மனம் நொந்து கடிந்துள்ளனர்.
இந்த மாணவர்களுக்கு ஊக்கமாகவும் வழித்துணையாகவும் இரண்டு ஆசிரியர்கள் கூடவே சென்றிருந்தனர். இந்தநிலையில் அந்தப் பகுதிக்கு வந்த பொலிஸார் மாணவர்களைப் பிடித்து விசாரித்தனர். அப்பொழுது கூடவே வந்திருந்த ஆசிரியர்கள் இருவரும் தலைமறைவாகிவிட்டனர்.
மாணவர்களிடம் இருந்த பிரசார அட்டைகளைப் பறித்துக் கொண்டு அவர்களை எச்சரிக்கை செய்து பாடசாலைக்கு அனுப்பி வைத்தனர் பொலிசார். பின்னர் பாடசாலைக்குச் சென்று அதிபரிடம் இதுபற்றி விசாரித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை அன்றைய தினம் பளை மாசார் அ.த.க.பாடசாலையிலும் பாடசாலை நேரத்தில் இதே பிரசார அட்டைகளை அதிபர் திருமதி தயாநிதியின் ஒத்துழைப்புடன் சிறிதரன் வழங்கியிருக்கிறார்.
பாடசாலை அதிபராக இருந்த சிறிதரன் தன்னுடைய தேர்தல் வெற்றிக்காக, தேர்தல் விதிமுறைகளை மீறி இப்படிக் கீழ்த்தரமான வேலைகளைச் செய்வது கண்டிக்கப்பட வேண்டியது. சிறீதரன் என்ற தனி ஒரு மனிதனின் சுயநலத்துக்காக பல நூறு மாணவர்களின் கல்வி பாழாய்ப்போவது, அவர்களின் கல்வி கற்கும் உரிமை பறிக்கப்படுவது குறித்து கல்விச்சமூகம் பாராமுகமாக இருப்பது ஆரோக்கியமானதல்ல.
இது மட்டுமல்லாமல், ஆரம்பப்பள்ளிகளில் கூட தேர்தல் பிரசார அட்டைகளை சிறிதரன் விநியோகித்து வருகிறார்.
முன்பள்ளிப் பிள்ளைகளின் புத்தகப்பைகளில் அவர்களுக்கு தெரியாமலேயே தேர்தல் பிரசார அட்டைகளை சிறீதரனின் பிரசார குழுவினர் வைத்து விடுகிறார்கள். கிளிநொச்சியின் முதன்மை முன்பள்ளியான ஆதவன் முன்பள்ளி தொடக்கம் பல முன்பள்ளிகளில் இப்படி நடக்கிறது.
தமது பிள்ளைகளின் எதிர்காலம், கல்வி கற்றல் செயல்பாடுகள் பாதிக்கப்படுவது தொடர்பில் குருகுலராஜாவிடம் தாம் முறையிட்டும், அவர் தனக்கு வடக்கு மாகாண கல்வி அமைச்சர் பதவியை சிறீதரன் பெற்று தந்தமைக்கு விசுவாசப்பல்லை இழிப்பதற்காக, தமது பிள்ளைகளின் கல்வி கற்கும் உரிமை பாதிக்கப்படுவது – பறிக்கப்படுவது தொடர்பில் எவ்வித அக்கறையுமற்று செயல்படுவதாகவும் மாணவர்களின் பெற்றோர்கள் மிகுந்த மனவருத்தமும் கவலையும் தெரிவிக்கின்றனர்
.-வீரதீரன் வீரதீபன்-dcp6416464646464 (1)

No comments:

Post a Comment