தமிழ் தேசியக்கூட்டமைப்பு தேர்தல் விஞ்ஞாபனத்தினில் தெரிவித்தது போன்று சுயநிர்ணயத்துடன் கூடிய சமஸ்டி தீர்வினை நோக்கி பயணிக்குமானால் அதற்கு ஆதரவளிக்கவும் அவ்விடயத்தினில் கொள்கை
ரீதியில் உடன்பட்டால் இணைந்து செயற்படவும் தயாராக இருப்பதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி அறிவித்துள்ளது.
தேர்தலில் செயற்பட்ட தமது ஆதரவாளர்கள் மற்றும் வாக்களித்த மக்களிற்கான நன்றி தெரிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடொன்று இன்று யாழ்.ஊடக அமையத்தினில் நடைபெற்றிருந்தது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,செயலாளர் கஜேந்திரன்,ஊடக பேச்சாளர் மணிவண்ணன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பத்மினி சிதம்பரநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.மாற்றமொன்றிற்கான வாக்களிப்பாக இவவாக்களிப்பினை எதிர்பார்த்திருந்த போதும் அது முழுமை பெற்றிருக்கவில்லை.ஆனால் கடந்த தேர்தலை விட பெருமளவிலானோர் எமக்கு வாக்களித்துள்ளனர்.வட-கிழக்கு எங்கும் முழுமையாக இம்முறை தேர்தலை நாம் எதிர்கொண்டிருந்தோம்.
எமக்கு வாக்களித்த மக்களையோ எமக்கு பேருதவி புரிந்து கொண்டிருக்கும் புலம்பெயர் உறவுகளதோ எதிர்பார்ப்புக்களினை நிறைவேற்ற நாம் பாடுபடுவோமெனவும் அங்கு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
ரீதியில் உடன்பட்டால் இணைந்து செயற்படவும் தயாராக இருப்பதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி அறிவித்துள்ளது.
தேர்தலில் செயற்பட்ட தமது ஆதரவாளர்கள் மற்றும் வாக்களித்த மக்களிற்கான நன்றி தெரிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடொன்று இன்று யாழ்.ஊடக அமையத்தினில் நடைபெற்றிருந்தது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,செயலாளர் கஜேந்திரன்,ஊடக பேச்சாளர் மணிவண்ணன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பத்மினி சிதம்பரநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.மாற்றமொன்றிற்கான வாக்களிப்பாக இவவாக்களிப்பினை எதிர்பார்த்திருந்த போதும் அது முழுமை பெற்றிருக்கவில்லை.ஆனால் கடந்த தேர்தலை விட பெருமளவிலானோர் எமக்கு வாக்களித்துள்ளனர்.வட-கிழக்கு எங்கும் முழுமையாக இம்முறை தேர்தலை நாம் எதிர்கொண்டிருந்தோம்.
No comments:
Post a Comment