August 18, 2015

பொதுத் தேர்தல் 2015 இறுதி முடிவுகள்; ஐ.தே.க 106, ஐ.ம.சு.கூ 95, த.தே.கூ 16!

இலங்கைப் பாராளுமன்றத்துக்கான பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி 106 ஆசனங்களை வெற்றி கொண்டுள்ளது. மொத்தமுள்ள 225 ஆசனங்களில் ஆட்சியமைப்பதற்கு 113 ஆசனங்கள் தேவையெனும் நிலையில், ஐக்கிய
தேசியக் கட்சி ஆட்சியமைப்பதற்கு இன்னும் 7 ஆசனங்களே தேவை.
இந்த நிலையில், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற சிலர் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசாங்கத்தில் பங்கெடுப்பார்கள் என்று தெரிகிறது.
பொதுத் தேர்தல் முடிவுகள் இன்று செவ்வாய்க்கிழமை மாலை முழுமையான வெளியாகின. அதன்பிரகாரம், நேரடியாக 93 ஆசனங்களை வெற்றி கொண்ட ஐக்கிய தேசியக் கட்சி தேசியப்பட்டியலினூடு 13 ஆசனங்களை வெற்றி கொண்டுள்ளது. இதன்மூலம் 106 ஆசனங்களைப் பெற்று முன்னிலை பெற்றது.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு நேரடியாக 83 ஆசனங்களையும், தேசியப்பட்டியல் மூலம் 12 ஆசனங்களையும் வெற்றி கொண்டு மொத்தமாக 95 ஆசனங்களைப் பெற்றுள்ளது.
வடக்கு- கிழக்கில் வெற்றி பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேரடியாக 14 ஆசனங்களையும், தேசியப்பட்டியல் மூலம் 2 ஆசனங்களையும் பெற்று மொத்தமாக 16 ஆசனங்களை வெற்றி கொண்டுள்ளது.
மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) நேரடியாக 4 ஆசனங்களையும், தேசியப்பட்டியல் மூலம் 2 ஆசனங்களையும் வெற்றி கொண்டு மொத்தமாக 6 ஆசனங்களை வெற்றி கொண்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தனித்துப் போட்டியிட்ட முஸ்லிம் காங்கிரஸ் ஒரு ஆசனத்தையும், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி யாழ்ப்பாணத்தில் ஒரு ஆசனத்தையும் கைப்பற்றியுள்ளன.
கட்சிகளுக்கிடையிலான ஆசனப் பகிர்வு
ஐ.தே.க 106 (நேரடி 93+ தேசியப்பட்டியல் 13)
ஐ.ம.சு.கூ 95 (நேரடி 83+ தேசியப்பட்டியல் 12)
த.தே.கூ 16 (நேரடி 14+ தேசியப்பட்டியல் 02)
ஜே.வி.பி 06 (நேரடி 04+ தேசியப்பட்டியல் 02)
மு.கா 01
ஈபிடிபி 01

No comments:

Post a Comment