கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு ஆரையம்பதி ஸ்ரீகந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த கும்பாபிசேக பூர்த்தி தின மகா சங்காபிசேகம் இன்று காலை சிறப்பான முறையில் நடைபெற்றது.
மிகவும் பண்டைய முருகன் ஆலயங்களுல் ஒன்றாக கருதப்படும் ஆரையம்பதி ஸ்ரீகந்தசுவாமி ஆலயத்தின் மூலமூர்த்தியாக வேல்கொண்டு வழிபடப்பட்டுவருகின்றது.
கிழக்கு மாகாணத்தில் ஆகமம் முறைகொண்ட ஆலயம் ஒன்றில் வேல்வழிபாடு மேற்கொள்ளப்படும் ஆலயங்களுல் குறிப்பிடத்தக்க ஆலயமாக ஆரையம்பதி ஸ்ரீகந்தசுவாமி ஆலயம் இருந்துவருகின்றது.
ஆலயத்தின் கும்பாபிசேகம் நடைபெற்றதை தொடர்ந்து அந்த தினத்தினை சிறப்பிக்கும் வகையில் வருடாந்தம் இந்த சங்காபிசேகம் நடைபெற்றுவருகின்றது.
இன்று காலை ஆலயத்தின் பிரதமகுரு தற்புருச சிவாச்சாரியர் சிவஸ்ரீ கணேஸ சோதிநாதன் குருக்கள் தலைமையில் வழிபாடுகள் ஆரம்பமானது.
ஆலயத்தின் பரிபால தெய்வங்களுக்கு தனித்தானியாக யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு மாபெரும் யாக நிகழ்வுகள் சிவாச்சாரியர்களினால் நடாத்தப்பட்டது.
அத்துடன் ஆலயத்தின் முன்பகுதியில் பிரதான கும்பம் மற்றும் 1008 சங்குகள் கொண்ட மாபெரும் தசபக்ஸ சங்காபிசேக பூஜைகள் நடாத்தப்பட்டன.
அதனைத்தொடர்ந்து மூலமூர்த்திக்கு விசேட அபிசேகம் நடாத்தப்பட்டதுடன் பரிபால மூர்த்திகளுக்கும் அபிசேகம் செய்யப்பட்டு பிரதான கும்பம் ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டு அபிசேகம் செய்யப்பட்டதுடன் சங்குகள் கொண்டும் அபிசேகம் செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து விசேட பூஜைகள் நடாத்தப்பட்டதுடன் இந்த நிகழ்வில் பெருமளவான அடியார்கள் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment