July 31, 2015

சமூக இணைவிற்காண இராப்போசன மாலை!

சுவிசின் இன்றைய அரசியலைப் பொறுத்தவரையின் வெளிநாட்டவர்களின் சமூக இணைவாக்கம் முதன்மை விடயமாக பேசப்பட்டு வருகின்றது.
அத்துடன் ஐரோப்பிய நாடுகளில் இருந்து சுவிஸ் நாட்டுக்குள் குடியேறுபவர்கள் மற்றும் அகதிகளாக குடியேறுவோர் போன்ற விடயங்கள் இன்றைய அன்றாட அரசியலின் பிரதிபலிப்பாக விளங்குகின்றது.

மறுபுறத்தில் இனத்துவேசமும் அதன்; அடிப்படையிலான அடக்குமுறையும் சமூகத்தில் அதிகரித்துச் செல்கிறது. இவற்றைக்கடந்து அனைத்துத் தரப்பும் அங்கம் வகிக்கக்கூடிய ஓர் மனிதநேயம் மிக்க சமதர்ம சமூதாயத்தை கட்டியெழுப்பவேண்டிய தேவையும் செயற்பாடுகளுமே எம்முன் விரிந்துகிடக்கும் அதிமுக்கிய பணியாகும்.

மேற்குறிப்பிட்ட இத் தேவைகளைப் பூர்த்திசெய்வதற்கு எமக்காக நேர்மையான, உண்மையான மற்றும் அறிவும் ஆற்றலும் நிறைந்த ஓர் அரசியல் பிரதிநிதியை சுவிஸ் பேர்ண் நாடாளுமன்றத்தில் இணைத்தால் மட்டுமே சாத்தியமாகும்.

டர்சிக்கா கிருஸ்னானந்தம் (பொருளியல் நிபுனர், தூண் நகர சொசலிச சனநாயகக் கட்சி (SP) உறுப்பினர், தூண் நகராட்சியின் பிரதிநிதி மற்றும் சமூக இணைவாக்கத்துறையின் அங்கத்தவர்) அவர்கள் 2015 ஆம் ஆண்டிற்கான நாடளுமன்றத் தேர்தலில்; பேர்ண் மாநிலத்தில் சொசலிச சனநாயகக் கட்சியின் (SP) சார்பாக போட்டியிடுகிறார்.


சுவிஸ் ஈழத்தமிழரவையில் அங்கம் வகிக்கும் டர்சிக்கா கிருஸ்னானந்தம்; அவர்களின் அரசியல் ரீதியான குறிக்கோள்கள்:

சமவாய்பு – சமஉரிமை – காலாச்சார, குடும்ப மற்றும் கல்விவழ ஊக்குவிப்பு – மனிதஉரிமை

இவ்விடையங்கள் சார்ந்து கலங்துரையாடல் ஒன்றை நாம் டர்~pக்கா கிருஸ்னானந்தத்துடனும் மேலும் பல சுவிஸ்நாட்டு பிரமுகர்களுடனும் ஏற்பாடு செய்துள்ளோம். இன் நிகழ்வில் டர்சிக்கா கிருஸ்னானந்தம் அவர்களும் சொசலிச கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அரசியல் ரீதியான தமது எண்ணங்களையும் விளக்குவார்கள்.

சுவிஸ் வாழ் தமிழ் இளையோர்கள் தாம் வாழும் நாட்டின் முழுமையான அரசியல் சனநாயக உரிமைகளை பெற்றுவாழ உழைக்க வேண்டும்.

சமூக இணைவாக்கம் தொடர்பக கலந்துரையாடும் பிரமுகர்கள்

•    Margret Kiener Nellen:  தேசிய நாடளுமன்ற உறுப்பினர் (SP)  மற்றும் சிரேஸ்ட சட்டத்தரணி.
•    Anna Annor:  சுவிஸ் ஈழத்தமிழரவையின் உபதலைவர் மற்றும் பன்மொழி மொழிபெயர்ப்பு நிபுணர்.
•    Mathuran Poopalapillai:  தேசிய நாடாளுமன்ற வேட்பாளர் (Grünliberale Partei)  மற்றும் பொருளியல் துறை மாணவர் Universität St.Gallen (HSG) பல்கழைக்கழகம்.
•    Sabina Stör: Interlake மாநில நகரசபை உறுப்பினர் மற்றும் சமூகவியல் பட்டதாரி.
•    Bashkim Rexhepi: Bern மாநிலத்தின் மேற்பிராந்திய தொழிளாலர் ஒன்றிய செயற்பாட்டாளர்.

இக் கலந்துரையாடல் joiz tv  தொலைக்காட்சியின் பிரபல அறிவிப்பாளர் தமா வாகீசன் அவர்களால் தொகுத்துவழங்கப்படும்.

திகதி?                                             
15. 08. 2015      

நேரம்? 
18:00 - 22:30                        
    
இடம்?
BEST WESTERN HOTELBERN
Zeughausgasse 9                                                        
CH-3011 Bern    

தொடர்பு: info@scet.ch / www.scet.ch /  032 631 05 27 / 076 360 94 86     

உட்பிரவேசம் இலவசம்.
இராப்போசனம் 25 CHF

முற்கூட்டியே உங்கள் வரவை எதிர்வரும் 10. 08. 2015 க்கு முன் மின்னஞ்சல் அல்லது தொலைபேசி ஊடாக உறுதிப்படுத்தவும்.

ஆர்வமுள்ள அனைவரையும் அழைக்கின்றோம்.

No comments:

Post a Comment