July 11, 2015

யேர்மனியில் இடம்பெறவுள்ள மாற்றத்தின் குரல் சந்திப்பு!

சமகாலத்தில் இடம்பெற்றுவரும் ஈழத்தேசிய அரசியல் போக்குகளை மனதிற்கொண்டு எம்மால் ஏதேனும் ஆக்கபூர்வமாக ஆற்ற முடியுமா என்ற ஆழமான சிந்தனைக்குப் பின் தோற்றம் கொண்டதே "மாற்றத்தின் குரல் " என்ற இந்த செயற்றிட்டம் .

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் தற்போது முன்னெடுக்கப்படுகின்ற அறவழி அரசியற் தொடர்ச்சியின் போக்குகளும் நோக்கங்களும் தடம் மாறிச் செல்வதாக பலரும் கூற ஆரம்பித்துள்ளார்கள் .
இக் கருத்தை ஆராய்ந்ததின் அடிப்படையில் தமிழ் அரசியற் தலைமையை தமிழர் நலன் சார்ந்து வழிப்படுத்தும் நோக்கத்துடன் தமிழ்த் தேசிய விடுதலையின் பணியில் கடந்த காலங்களாக ஈடுபடும் நம்மில் சிலர் ஒருங்கிணைந்தோம் .
தமிழ்த் தேசியக்கூ ட்டமைப்புக்கு இணையாகத் தமிழ்த் தேசியத்தின் நலன் சார்ந்து முழுமையாகச் செயற்படவல்ல மற்றுமொரு தலைமையை உருவாக்குவதன் மூலம் அரசியல் வலு சமநிலையினை ஏற்படுத்தி தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முரண் போக்கினை இனநலன் சார்ந்து நெறிப்படுத்த முடியும் என நாம் நம்புகின்றோம் .
தமிழ்த் தேசியக் கூ ட்டமைப்பின் அடிபணிவு அரசியல் சிந்தனைத் தளங்களில் இருந்து மாறுபட்டு புதிய மாற்றங்களின் குரலாக ஒலிக்கவும் ,
எமது தேடலில் தெளிந்த அமைப்பாக ,
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் இயங்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியே எம்மால் அடையாளம் காணப்பட்டது .
தாயகம் தேசியம் தன்னாட்சி என்ற இன இருப்பின் அடிப்படைகளில் இருந்து விலகாது பயணிக்கும் இக்கட்சியின் அடிப்படை வரைகளையும் பேரங்களுக்கு விலை போகாத ஆளுமையையும் தெளிவாகப் புரிந்து கொண்ட பின்னரே நாம் இக் கட்சியை ஆதரிக்க முடிவு செய்துள்ளோம் .
நடைபெற இருக்கும் பாராளுமன்றத் தேர்தலில் ஐந்து மாகாணங்களிலும் போட்டியிடும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கட்சிக்கு புலம்பெயர் தேசங்களில் நாம் வாழந்தாலும் எமது தாயக உறவுகளின் ஊடாக எமது ஆதரவை வலுப்படுத்துவோம் . தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கான ஆதரவு என்பது தமிழ்த் தேசியத்தை உயிர்வாழ வைப்பதுக்கான செயற்பாடாகவே அமைகின்றது .
எதிர்வரும் நாட்களில் யேர்மனியில் தமிழ்த் தேசியத்தின் எதிர்கால இருப்பிற்கான சமகால அரசியல் கலந்துரையாடல் ஒழுங்கு செய்யப்படும் என்பதையும் ,அதில் அனைத்து யேர்மன் புலம்பெயர் தமிழ் மக்கள் அனைவரும் கலந்துகொள்ளுமாறும் அன்புடன் கேட்டுக் கொள்கொன்றோம் .
ஈழத்தமிழரது தனித்துவ அரசியல் பேரியக்கத்தின் வலுவான தொடர்ச்சியை மீளக் கட்டமைப்போம் .
மக்கள் சந்திப்பு : 11.07.2015 , 9 மணிக்கு
Frankfurt am Main
12.07.2015 , 15:30 மணிக்கு
Freizeitheim Döhren, Anderwollebahn 1, 30519 Hannover
தொடர்புகட்கு : 017621751446, 017641313331, 017641234580

No comments:

Post a Comment