July 10, 2015

மண்டையன் குழுத் தலைவருக்காக அசோக ஹோட்டலில் இருந்தே சுரேஷ்பிரேமசந்திரன்!

இந்தியன் ஆமி வடக்கு கிழக்குப் பகுதியில் இருந்த காலகட்டத்தில் தமிழ் மக்களுக்கு சிம்மசொப்பனமாக விளங்கிய குழு மண்டையன் குழுவாகும். இந்திய இராணுவத்துடன் இணைந்து புலி இயக்கத்தினருக்கு எதிராகசெயல்பட்டுகொண்டிருந்த EPRLFயின் தலைமையகம்​ யாழ்பாணம்
அசோக ஹோட்டலில் அமைந்திருந்த்து. EPRLF அமைப்பை அப்போது மண்டையன் குழு என்றே மக்கள் அழைத்தனர்.
இவ் அசோக ஹோட்டலில் இருந்தே சுரேஷ்பிரேமசந்திரன் செயல்பட்டு கொண்டிருந்தார் இவரை அவ்காலப்பகுதியில் யாழ்ப்பாண பொதுமக்கள் மண்டயன் குழுத்தலைவன் என்று அழைப்பர் ஏன்என்றல் இவரும் இவரின்​ குழுவினரும் புலி இயக்க ஆதரவளர்கள், போராளிகளை பிடித்து மண்டையில் சுட்டுகொண்று விடுவார்கள் ஆகையினால் இவரின் குழுவிரை மண்டயன் குழு என்றும், சுரேஷ்பிரேமசந்திரனை மண்டயன் குழுத்தலைவன் என்று யாழ்ப்பாண பொதுமக்கள் அழைத்தனர்.
இவர்களின் அட்டகாசத்தைத் தாங்க முடியாது பொதுமக்கள் திணறிக் கொண்டிருந்த வேளையில் 1989ம் ஆண்டு கடைசி கால பகுதியில் புலிகளின் முல்லைத்தீவு 1-4 (One Four) Base complex யில் உதயபிடம் (ஜீவன்) முகாமில் 100 யில் இருந்து 150 புலி இயக்க போராளிகள் ​ஓரு தீவிர பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தார்கள். இவ்பயிற்சிக்காக 12000க்குமேற்ப்பட்ட ரவைகள் கொடுக்கபட்டு பயிற்சி நடைபெற்றத்து.
இவர்கள் எதற்காக இவ்வாறு பயிற்சி எடுத்தார்கள் என்றால் அசோக ஹோட்டல்மீது தாக்குதல் நடாத்தி சுரேஸ்பிரேமச் சந்திரனுக்கு மண்டையில் வெடி வைப்பதற்காகவே!. இருப்பினும் சுரேஸ் அண்ணனுக்கு ஆயுள் கெட்டியாக இருந்துள்ளது. 1990ம் ஆண்டு இவ் அணி யாழ்செல்லும் முன் மண்டயன் குழுவும் அதன் தலைவரும் IPKF பாதுகாப்பில் இந்தியாவற்க்கு சென்றுவிட்டனர்.
இந்நிலையில் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனால் துரோகியாக, விரோதியாக, மரண தண்டனைக் குற்றவாளியாக பிரகடனப்படுத்தப்பட்டார் சுரேஸ்.

தலைவரின் உத்தரவுக்கு அமைய பிரேமச்சந்திரனின் கதையை முடிக்க விசேட நிபுணர்கள் குழு உருவாக்கப்பட்டது. முல்லைத்தீவில் உள்ள ஜீவன் முகாமில் இதற்காக சுமார் 150 போராளிகள் தீவிர பயிற்சிகள் வழங்கப்பட்டு தயார்ப்படுத்தப்பட்டனர்.

மகாபாரதத்திலே இலக்குப் பார், அம்பு விடு என்று ஒரு குட்டிக் கதை உள்ளது. சீடர்களான கௌரவர்களுக்கும், பாண்டவர்களுக்கும் துரோணாச்சாரியார் வில் வித்தை கற்பித்துக் கொண்டு இருந்தார்.

உயர வளர்ந்த மரம். மரத்தின் உச்சியின் கிளை. கிளையில் நுனியில் களி மண்ணில் செய்யப்பட்ட கிளியின் உருவம். மாணவர்கள் கிளியின் உருவத்தை இலக்கு பார்த்து அம்பால் அடித்து விழுத்த வேண்டும். ....

இதே போல இப்போராளிகளுக்கு பயிற்சிக்காக கொடுக்கப்பட்ட இலக்கு எது தெரியுமா? சுரேஸ் பிரேமச்சந்திரனின் உருவப் படம் ஆகும். இவருடைய படத்தை இலக்கு பார்த்து சுட்டுச் சுட்டு 12000 ரவைகளை தீர்த்தார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

ஆனால் புலிகளின் நிபுணர்கள் குழு இவரை போட்டுத் தள்ள  வந்தபோது சகாக்களை நட்டாற்றில் கை விட்டு விட்டு இந்தியாவுக்கு தப்பி ஓடி விட்டார். இவரால் பிழையாக வழி நடத்தப்பட்டு மண்டையன் குழுவில் சேர்ந்து இயங்கிய இளைஞர்களை கொன்று பழி தீர்த்தார்கள் புலி நிபுணர்கள்.

தமிழீழத்தில் ஏனைய மாற்றுப் போராட்ட அமைப்புகளுக்கு இடம் இல்லை என்கிற உறுதியான தீர்மானத்துக்கு பிரபாகரன் வருகின்றமைக்கு மண்டையன் குழுவே காரணம் ஆனது. அத்துடன் மீண்டும் ஒரு சுரேஸ் பிரேமச்சந்திரன் உருவாகப்படவே கூடாது என்பதற்காகத்தான் மாற்று இயக்க போராளிகளை வேரறுக்கின்ற வேலைத் திட்டத்தை புலிகள் இயக்கம் தீவிரமாக முன்னெடுத்தது.

தற்போது இவர்கள் தமிழ் மக்களுக்காக தாங்கள் கூறிய ஏதாவது ஒன்றையாவது நிறைவேற்றியிருக்கின்றார்களா, இவர்கள்  என்ன செய்தவர்கள்? என்ன செய்யப் போகின்றார்கள்? , என்ன செய்கின்றார்கள்? என்பதை ஒரு கணமாவது சிந்தி்ததுப் பாருங்கள் தமிழ்மக்களே!!

No comments:

Post a Comment