July 10, 2015

1984 ஆம் ஆண்டு தமிழீழத் தனி நாடு கேட்டவர்களுக்கு தமிழகத்தில் தனி வீடு கிடைத்தது-சம்பந்தன்


1984 ஆம் ஆண்டு பெப்ரவரி 20 ஆம் திகதி தமிழ்நாடு அரசாங்கத்தால் சம்பந்தனுக்கு சென்னையில் தனி வீடு வழங்கப்பட்டது. சம்பந்தரின் மனைவி சம்பிரதாயபூர்வமாக வீட்டுத் திறப்பை பெற்றுக் கொண்டார்.
இச்செய்திகள் தமிழ்நாட்டு பத்திரிகைகளில் புகைப்படத்துடன் வெளியானது.

புலிகளின் தலைவர் வே. பிரபாகரனின் ஆசியுடன் விடுதலைப் புலிகள் பத்திரிகை 1984 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 ஆம் திகதி முதல் வெளிவரத் தொடங்கியது.

இதன் முதலாவது இதழிலே சம்பந்தருக்கு சென்னையில் தனி வீடு கிடைத்த விடயம் நையாண்டிச் செய்தியாக பிரசுரிக்கப்பட்டது. தமிழீழத் தனி நாடு கேட்டவர்களுக்கு தமிழகத்தில் தனி வீடு கிடைத்தது என்பது செய்தித் தலைப்பு.


இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேர்தல் சின்னம் வீடு ஆகும். தமிழ் தேசிய கூட்டமைப்பும் வீட்டுச் சின்னத்திலேயே தேர்தல் கேட்டு வருகின்றது.

தேர்தல் தேவைக்கு அப்பால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் இன்றைய தலைவரும், தமிழரசுக் கட்சியின் முன்னைய தலைவருமான இரா. சம்பந்தனுக்கும், வீட்டுக்கும் நிறையவே சம்பந்தம் இருந்து வருகின்றது.

தனி நாடு கேட்டு போராட நாடாளுமன்றம் வந்த சம்பந்தன் குழுவினருக்கு தமிழ்நாட்டில் கிடைத்தவை தனி வீடுகள்.



சம்பந்தருக்கு கொழும்பிலும் ஆடம்பர வீடு உள்ளது. ஒரு முறை வீட்டில் இருந்து புகை கிளம்பியது. அவ்வளவுதான். இதை வைத்து அப்போதைய ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவிடம் இருந்து இழப்பீடு என்று பெருந்தொகைப் பணம் பெற்றுக் கொண்டார். மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சியில் நகர அபிவிருத்தி அதிகார சபை தலைவராக இருந்த கோட்டாபய ராஜபக்ஸவிடம் இருந்தும் இழப்பீடு பெற்றுக் கொண்டார்.

No comments:

Post a Comment