July 28, 2015

அப்துல் கலாம் உடலுக்கு இந்திய ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சர்கள் அஞ்சலி!

இன்று காலை ராணுவ ஹெலிகாப்டர் மூலம் கலாமின் உடல் ஷில்லாங்கில் இருந்து அசாம் தலைநகர் கவுகாத்தி கொண்டு செலப்பட்டு அஞ்சலி
செலுத்தப்பட்டது. அதன்பின்னர் கவுகாத்தியில் இருந்து சிறப்பு விமானத்தில் அவர் உடல் டெல்லிக்கு கொண்டுசெல்லப்பட்டது.
டெல்லியில் உடலை பெற்றுகொண்ட முப்படையினர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, மத்திய அமைச்சர்கள் அஞ்சலி செலுத்தினர்.
இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதியும் மூத்த விஞ்ஞானியுமான அப்துல்கலாம் நேற்றுமாலை மேகாலயாவில் காலமானதால் இந்திய மக்கள் சோகக் கடலில் ஆழ்ந்துள்ளனர்.
ஏவுகணை மனிதர்’, ’மக்களின் ஜனாதிபதி’ எனப் புகழப்பட்ட அவர் நேற்று மாலை மேகாலயா மாநிலத் தலைநகர் ஷில்லாங்கில் இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனத்தில் மாணவர்கள் மத்தியில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
தமிழ்நாடு ராமேஷ்வரத்தில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த அப்துல்கலாம் தனது வாழ்க்கையில் பல தடைகளைத் தாண்டி விண்வெளி ஆய்வு மற்றும் பாதுகாப்புத்துறையில் மகத்தான சாதனைகள் படைத்தார்.
இந்தியா வல்லரசானால் மட்டும் போதாது, நல்லரசாகவும் இருக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் வாழ்ந்த அப்துல்கலாம் தனது ஒவ்வொரு நாளையும் அதற்காகவே செலவிட்டார். இந்தியாவை வல்லரசாக மாற்ற மாணவர்களால் மட்டுமே முடியும் என்று நம்பிய அவர் பள்ளிகள், கல்லூரிகளுக்கு சென்று சிறப்புரையாற்றி வந்தார். அப்படி சிறப்புரையாற்றச் சென்ற மேகாலயா மாநிலத்தில் அவர் காலமானார்.




No comments:

Post a Comment