July 28, 2015

1983ம் ஆண்டு ஆடிக்கலவரத்தின் 32ம் ஆண்டு நினைவு தினம் எழுச்சிபூர்வமாக நினைவுகூரப்பட்டது! இன அழிப்பினை நிரூபிக்க சாட்சி சொல்ல பலர் முன்வந்தனர்!(படங்கள் இணைப்பு)

இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக 1983ம் ஆண்டு ஜூலை மாதம் இலங்கை அரசினால் மேற்கொள்ளப்பட்ட தமிழினப்படுகொலையின் 32ம் ஆண்டு நினைவு தினம் கடந்த 23ம் திகதி வியாழக்கிழமை பிரித்தானிய வாழ்
தமிழர்களினால் பிரித்தானிய பிரதமரின் அலுவலகத்தின் முன்பாக உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. பல நூற்றுக்கணக்கான மக்கள் இணைந்து கொண்ட இந்நிகழ்வில் இலங்கை அரசினால் மேற்கொள்ளப்பட்ட தமிழினப் படுகொலைகளை விபரிக்கும் பதாகைகளும் அவற்றிற்கான நீதி கோரும் பதாகைகளும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
குறிப்பாக இலங்கையின் இரு பிரதான சிங்கள கட்சிகளினாலும் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலைகளை ஆதாரபூர்வமாக விபரிக்கும் பதாகைகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தமை இலங்கை அரசினால் மேற்கொள்ளப்படவிருக்கும் உள்ளக விசாரணையின் நம்பகத் தன்மைக்கு சவாலாக அமைந்தது. மாறி மாறி இலங்கையின் ஆட்சியைக் கைப்பற்றியிருந்த இரு சிங்களக் கட்சிகளும் தமிழின இன அழிப்பில் நிலையான ஒரே கொள்கையையே பின்பற்றும் நிதர்சனமான உண்மையை சர்வதேச நாடுகளுக்கு தெளிவுபடுத்தியிருந்தது.
சர்வதேச விசாரணையை வலியுறுத்தி ஆர்ப்பாட்ட கோசங்களும் எழுப்பப்பட்ட அதே சமயம் இனக்கலவரத்தில் பாதிக்கப்பட்ட நேரடிச் சாட்சியங்களாக விளங்கிய பலர் தமது அனுபவங்களையும் மக்களுடன் பகிர்ந்து கொண்டனர். பிரித்தானிய தமிழர் பேரவையின் வேண்டுகோளுக்கமைய பல்வேறு இனவழிப்பு நடவடிக்கைகளில் பாதிக்கப்பட்டோர், அதனை நேரடியாக பார்த்தவர்கள் மற்றும் அவர்களின் உறவுகள் தம் சாட்சியங்களை பதிவு செய்யவும் தேவைப்படுமிடத்து நீதி விசாரணையில் சாட்சியமளிக்கவும் முன் வந்துள்ளார்கள் என்பது தமிழ் மக்களின் நீதிக்கான போராட்டத்திற்கு வலுவூட்டும்.
சரணடைந்த அல்லது கைது செய்யப்பட்ட பல்லாயிரக்கனக்கனோர் எங்கே என்ற (“ARE THEY ALIVE?”) மனுக்களில் பலர் நிரப்பிக் கையளித்தனர். இவை பிரித்தானிய பாராளுமன்ற உருப்பினர்களுக்கூடாக பிரதமர் டேவிட் கமரூனிடம் அனுப்பப்பட்டு பொறுப்புக் கூறுமாறு கோரப்படும். சிறிலங்கா அரசினை பெரும் நெருக்கடிக்குள் தள்ளி விடும் இப் போராட்டம் மக்கள் மத்தியில் வேகமாகப் பரவி வருகின்றது.
இறுதியாக 1983ம் ஆண்டு இனக்கலவரத்தில் உயிரிழந்த உறவுகளுக்காக ஒரு நிமிட அஞ்சலியும் அவர்களுக்கு அஞ்சலி தீபமும் ஏற்றப்பட்டு இறுதியில் பிரித்தானிய தமிழர் பேரவையின் இறுதி உரையுடன் இந்நினைவு தினம் நிறைவு பெற்றது.dcp246376767676 (2)dcp246376767676 (3)dcp246376767676 (4)dcp246376767676 (5)dcp246376767676 (6)dcp246376767676 (7)dcp246376767676 (8)dcp246376767676 (9)dcp246376767676 (10)dcp246376767676 (11)dcp246376767676 (12)dcp246376767676 (13)dcp246376767676 (14)

No comments:

Post a Comment