July 28, 2015

வவுனிக்குளம் நீர்ப்பாசன குளத்தின் கீழ் 23 ஏக்கர் நெற்செய்கை பாதிப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தில் வவுனிக்குளம் நீர்ப்பாசனக் குளத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட சிறுபோக நெற்செய்கைக்கு முறையான விதத்தில் நீர்
விநியோகம் மேற்கொள்ளப்படாமையால் சுமார் 23 ஏக்கர் நெற்செய்கை அழிந்துள்ளதாக விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
வவுனிக்குளத்தின் கீழ் இம்முறை சுமார் 2000 ஏக்கர் நிலப்பரப்பில் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டது. இதில் இடதுகரை வாய்க்காலின் 1ஆம், 2ஆம் மற்றும் 3ஆம் வாய்க்கால்களை அண்டிய வயல் நிலங்களில் மேற்கொள்ளப்பட்ட சுமார் 23 ஏக்கர் நெற்செய்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் நீர்ப்பாசனத் திணைக்களத்தின் வவுனிக்குளம் அலுவலகத்திடம் கேட்டபோது, சிறுபோக செய்கைக்குத் தேவையான போதியளவு நீர் வவுனிக்குளத்தில் இருக்கின்றது. சிறுபோக செய்கை விவசாயிகளுடன் இடம்பெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு அமைய நீர் விநியோகம் சீராக மேற்கொள்ளப்பட்டது. இருந்தும் கிளை வாய்க்கால்களுக்கு நீர் விநியோகம் செய்வதற்கு பொறுப்பானவர்களின் தவறால் 23 ஏக்கர் நெற்செய்கை பாதிக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

No comments:

Post a Comment