யாழ்.நகர்பகுதியில் வழித்தட அனுமதி இல்லாமல் சட்டத்திற்கு மாறாக மதுபானம் ஏற்றிவந்த இருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
இவர்களிடமிருந்து 391 சாராய போத்தல்களும் வாகனமும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.
வழித்தட அனுமதி பெறாமல் யாழ்.குடாநாட்டுக்குள் அதிகளவு மதுபானம் கொண்டு வரப்படும் நிலையில் இன்றைய தினம் யாழ்.பிராந்திய பொலிஸ் அதிகாரியின் பணிப்பின் பெயரில் இடம்பெற்ற விசேட சோதனையின் போது குறித்த மதுபானம் பிடிக்கப்பட்டுள்ளது.
இதன்போது சுன்னாகம் பகுதியை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். எனவும் இருவரும் 45 வயதானவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.







No comments:
Post a Comment