யுத்தத்தின் போது பாதிக்கப்பட்டவருக்கும், ஒரு மூத்த தம்பதியினருக்கும் உதவிகளை வழங்கியது உலகத் தமிழ் மக்கள் மறுவாழ்வு உரிமைகள் ஆணையம்.
இலங்கையில் ஏற்பட்ட கடும் யுத்தம் காரணமாக மிகவும் மோசமான... பின்தங்கிய நிலையில் உள்ள அதாவது வாழ்வாதரங்களை இழந்த உறவுகள்... உடலுறுப்புக்கள் இழந்தவர்கள் மற்றும் உதவிகளற்ற குடும்பங்களை கண்டறிந்து அவர்களுக்குத் தேவையான தொழில் உதவி, மருத்துவ உதவி மற்றும் கல்வி உதவிகளை வழங்கி சமீப காலமாக பேருதவி புரிந்து வருகின்ற உலகத்தமிழ் மக்கள் மறுவாழ்வு உரிமைகள் ஆணையமானது மிகவும் பின்தங்கிய குடும்பங்களின் இருண்ட வாழ்வில் ஒளியேற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
அந்த வகையில் இந்த மாதத்திற்கான உலகத் தமிழ் மக்கள் மறுவாழ்வு உரிமைகள் ஆணையத்தின் வாழ்வாதாரப் பயனாளியான, மட்டக்களப்பு மாவட்டம் ஏரிக்கரை, கிரானைச் சேர்ந்த திரு. கதிர்காமத்தம்பி அரசரத்தினம் என்கின்ற சகோதரன் யுத்தத்தினால் மிகவும் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரமின்றி தனது சகோதரியுடன் மிகவும் துயரங்களுடன் தவித்து வந்தார்.
ஈழத்தில் நடந்த யுத்தத்தின் காரணமாக படுகாயமுற்று இடுப்பிற்கு கீழ் இயங்க முடியாத நிலையில் படுக்கைப் புண் உருவாகி மிகவும் கொடிய வலியோடு வாழ்ந்து வருகின்ற அரசரத்தினம் என்கின்ற சகோதரன் தனது அன்றாட வாழ்வதார தேவைகளுக்கும் வசதியற்ற நிலையிலும்...
தனது சகோதரியைத் தவிர வேறு எந்த உறவுகளின் உதவிகளுமின்றி மிகவும் துயர நிலையிலேயே நமது ஆணையத்திடம் உதவி கேட்டு வந்திருந்தார்.
இவரது உதவி வேண்டுகையினை ஏற்றுக் கொண்ட உலகத் தமிழ் மக்கள் மறுவாழ்வு உரிமைகள் ஆணையமானது அவருக்கான வாழ்வாதார நிதியாக அதாவது வீட்டில் இருந்தபடியே ஒரு சிறிய பெட்டிக்கடை ஒன்றினை அமைத்து தனது வாழ்வாதாரத்தை பெருக்கிக் கொள்வதற்காக ஒரு இலட்சம் இலங்கை ரூபாய்களை வழங்கி உதவியுள்ளது.
அத்தோடு யாழ் மாவட்டம் கே.கே.எஸ் வீதி மல்லாகத்தைச் சேர்ந்த விஜயரட்னம் நகுலேஸ்வரி என்ற தம்பதியினருமம்ஒரு சிறிய உதவியினை ஆணையத்திடம் வேண்டி நின்றனர். அதாவது உடல் இயலாத கணவரோடு வேறு உதவியின்றி வாழ்ந்து வரும் மனைவியானவர் தங்களது வீட்டில் ஏற்கனவே உள்ள பசு மாட்டோடு இன்னொரு பசு மாட்டினையும் சேர்த்து வளர்ப்பதனால் வீட்டில் இருந்தபடியே பால் கறந்து விற்பனை செய்து தமக்குத் தேவையான வருமானத்தைப் பெற்றுக் கொள்ள முடியும் என்ற அடிப்படையில்...
ஒரு பசு மாடு ஒன்றினை பெற்றுக் கொள்ள ஒரு சிறிய உதவி கேட்டிருந்த நிலையில் அவர்களது உதவியினை ஏற்றுக் கொண்ட உலகத் தமிழ் மக்கள் மறுவாழ்வு உரிமைகள் ஆணையத்தின் டென்மார்க் தேச ஒருங்கிணைப்பாளர் அவர்கள் தனது சொந்த நிதியிருந்து 15 ஆயிரம் ரூபாக்களை வழங்கி உதவி புரிந்துள்ளார்.
மேற்குறிப்பிட்ட இரு உதவிகளையும் பெற்றுக் கொண்ட இரு உறவுகளும் தமது எதிர்காலத் தேவைகளையும் ஓரளவேனும் பூர்த்தி செய்ய முடியும் என்று முழு நம்பிக்கையினைத் தெரிவித்துள்ளார்கள். அத்தோடு உலகத்தமிழ் மக்கள் மறுவாழ்வு உரிமைகள் ஆணையத்திற்கும் உதவிகள் நல்கிய உறவுகளுக்கும் தமது நன்றிகளையும் தெரிவித்துள்ளார்கள்.
அவருக்கான உதவிகள் நல்கிய அனைத்து அன்புள்ளங்களுக்கும் உலகத்தமிழ் மக்கள் மறுவாழ்வு உரிமைகள் ஆணையத்தின் மனமார்ந்த நன்றிகள்.!!
“அன்பினால் அனைவரையும் அரவணைப்போம்”
– முதன்மைச் செயலகம்,
உலகத்தமிழ் மக்கள் மறுவாழ்வு உரிமைகள் ஆணையம்.
இலங்கையில் ஏற்பட்ட கடும் யுத்தம் காரணமாக மிகவும் மோசமான... பின்தங்கிய நிலையில் உள்ள அதாவது வாழ்வாதரங்களை இழந்த உறவுகள்... உடலுறுப்புக்கள் இழந்தவர்கள் மற்றும் உதவிகளற்ற குடும்பங்களை கண்டறிந்து அவர்களுக்குத் தேவையான தொழில் உதவி, மருத்துவ உதவி மற்றும் கல்வி உதவிகளை வழங்கி சமீப காலமாக பேருதவி புரிந்து வருகின்ற உலகத்தமிழ் மக்கள் மறுவாழ்வு உரிமைகள் ஆணையமானது மிகவும் பின்தங்கிய குடும்பங்களின் இருண்ட வாழ்வில் ஒளியேற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
ஈழத்தில் நடந்த யுத்தத்தின் காரணமாக படுகாயமுற்று இடுப்பிற்கு கீழ் இயங்க முடியாத நிலையில் படுக்கைப் புண் உருவாகி மிகவும் கொடிய வலியோடு வாழ்ந்து வருகின்ற அரசரத்தினம் என்கின்ற சகோதரன் தனது அன்றாட வாழ்வதார தேவைகளுக்கும் வசதியற்ற நிலையிலும்...
இவரது உதவி வேண்டுகையினை ஏற்றுக் கொண்ட உலகத் தமிழ் மக்கள் மறுவாழ்வு உரிமைகள் ஆணையமானது அவருக்கான வாழ்வாதார நிதியாக அதாவது வீட்டில் இருந்தபடியே ஒரு சிறிய பெட்டிக்கடை ஒன்றினை அமைத்து தனது வாழ்வாதாரத்தை பெருக்கிக் கொள்வதற்காக ஒரு இலட்சம் இலங்கை ரூபாய்களை வழங்கி உதவியுள்ளது.
ஒரு பசு மாடு ஒன்றினை பெற்றுக் கொள்ள ஒரு சிறிய உதவி கேட்டிருந்த நிலையில் அவர்களது உதவியினை ஏற்றுக் கொண்ட உலகத் தமிழ் மக்கள் மறுவாழ்வு உரிமைகள் ஆணையத்தின் டென்மார்க் தேச ஒருங்கிணைப்பாளர் அவர்கள் தனது சொந்த நிதியிருந்து 15 ஆயிரம் ரூபாக்களை வழங்கி உதவி புரிந்துள்ளார்.
அவருக்கான உதவிகள் நல்கிய அனைத்து அன்புள்ளங்களுக்கும் உலகத்தமிழ் மக்கள் மறுவாழ்வு உரிமைகள் ஆணையத்தின் மனமார்ந்த நன்றிகள்.!!
“அன்பினால் அனைவரையும் அரவணைப்போம்”
– முதன்மைச் செயலகம்,
உலகத்தமிழ் மக்கள் மறுவாழ்வு உரிமைகள் ஆணையம்.
No comments:
Post a Comment