வர்த்தகரின் மனைவியின் நிர்வாணப்படத்தை பேஸ்புக்கில் பதிவேற்றப் போவதாக மிரட்டி பணம் பறிக்க முயன்ற வாலிபனை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த பரபரப்பு சம்பவம் மாவனல்லயில் நடந்துள்ளது.
மாவனல்ல வர்த்தகர் ஒருவர் தனது மனைவியுடன் உல்லாசமாக இருந்த பல காட்சிகளை தனது கணினியில் சேமித்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது. திடீரென ஒருநாள் அவரது கணினி, கைத்தொலைபேசி, மற்றும் இணைய இணைப்புசாதனம் என்பன காணாமல் போய்விட்டன. பதறிப்போன வர்த்தகர் பல இடங்களிலும் தேடினார்.
அந்த சமயத்தில், வர்த்தகரின் கடையில் பணிபுரிந்த வாலிபன் ஒருவன், காணாமல் போன பொருட்கள் தன்னிடமுள்ளதாகவும், அவற்றை தருவதாயின் 25 இலட்சம் ரூபா கப்பமாக தரவேண்டுமென்றும் மிரட்டியுள்ளான். பணத்தை தரமறுத்தால், கணினியிலுள்ள வர்த்தகரின் மனைவயின் நிர்வாணப்படங்களை பேஸ்புக்கில் பதிவேற்றிவிடப் போவதாகவும் திரட்டியுள்ளார்.
வாலிபனின் மிரட்டலிற்கு அஞ்சாத வர்த்தகர், விடயத்தை பொலிசாரிடம் தெரிவித்தார். விரைந்து செயற்பட்ட பொலிசார் வாலிபரை கைது செய்தனர். இவரை மாவனல்ல நீதவான் நீதிமன்றத்தில் நிறுத்தியபோது, எதிர்வரும் 17ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் சாந்தினி மீகொட உத்தரவிட்டுள்ளார்.


No comments:
Post a Comment