June 18, 2015

வல்லை விபத்தில் இளைஞர் உயிரிழப்பு!

வல்லைவெளிப் பகுதியில் இன்று வியாழக்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர்
உயிரிழந்துள்ளார்.யாழ்ப்பாணத்திலிருந்து வடமராட்சி நோக்கி வேகமாகச் சென்ற மோட்டார் சைக்கிளின் முன்சில்லு காற்றுப் போனதால் அது வேகக்கட்டுப்பாட்டை இழந்து பனை மரத்துடன் மோதியதில் அதில் பயணித்த மூவரில் ஒருவர் அந்த இடத்திலேயே உயிரிழந்தார். மற்றைய இருவரும் படுகாயமடைந்தனர்.
இந்தச் சம்பவத்தில் தொண்டமானாறு கெருடாவிலைச் சேர்ந்த செந்த்தில்வேல் திவாகர் (வயது 18) என்ற இளைஞரே உயிரிழந்தார்.
ஆனந்தராஜா அனோஜன் (வயது 15) ஆபத்தான நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையிலும், வேதநாயகம் சிவரூபன் (வயது 20) பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையிலும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment