பாரிசில் இருந்து கொழும்பு வந்து கொண்டிருந்த சிறிலங்கன் எயர்லைன்ஸ்
விமானம், காற்றழுத்த மாறுபாட்டினால் குலுங்கியதால், விமானப் பணியாளர்கள்
ஐந்து பேர் காயமடைந்தனர்.
சிறிலங்கன் விமான சேவையின் யு எல் -564 விமானம் 193 பயணிகள் மற்றும் 16 பணியாளர்களுடன் கட்டுநாயக்க நோக்கி இன்று அதிகாலை வந்து கொண்டிருந்த போதே இந்தப் பாதிப்பைச் சந்தித்தது.
இதனால், விமானப் பணியாளர்கள் 5 பேர் காயமடைந்த போதிலும், பயணிகள் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.
இன்று அதிகாலை 5.21 மணியளவில் இந்த விமானம் பாதுகாப்பாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியது.
உடனடியாக காயமுற்ற 5 விமானப் பணியாளர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அவர்களில் ஒருவர் மருத்துவ சிகிச்சையின் பின் வீடு திரும்பியுள்ள போதிலும் ஏனையொருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

No comments:
Post a Comment