பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் படுகொலையுடன் தொடர்புடைய மூன்று
சந்தேகநபர்களுக்கு, டீ.என்.ஏ (DNA) பரிசோதனை மேற்கொள்ள வேண்டுமென
விசாரணைகளை முன்னெடுக்கும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின்
உத்தியோகத்தர்கள் இன்று நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
கொழும்பு மேலதிக நீதவான் நிரோஷா பெர்னாண்டோ முன்னிலையில் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் ஆஜர்படுத்தப்பட்ட சந்தர்ப்பத்தில், இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் பெற்றுக்கொள்ளப்பட்ட சந்தேகநபர்களினதும், உயிரிழந்தவரதும் இரத்த மாதிரிகளை பரிசோதனைக்கு உட்படுத்தி, இந்த சந்தேகநபர்கள் சம்பவத்துடன் தொடர்புபட்டவர்களா என்பதைக் கண்டறிய டீ.என்.ஏ பரிசோதனை நடத்துவது முக்கியமானது என குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் தெரிவித்தனர்.
சந்தேகநபர்களுக்கு டீ.என்.ஏ பரிசோதனை மேற்கொள்வதற்கு நீதிமன்றத்தினால் ஜூன் 05 ஆம் திகதிவரை காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment